ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. (பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது. மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 1442)حَدَّثَنَا أَبُو زُرْعَةَ الدِّمَشْقِيُّ، ثنا أَبُو نُعَيْمٍ، ثنا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عِيسَى، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ ثَوْبَانَ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ، وَلَا يَزِيدُ فِي الْعُمُرِ إِلَّا الْبِرُّ، وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ، بِالذَّنْبِ يُصِيبُهُ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-1442.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-1425.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அப்துல்லாஹ் பின் அபுல் ஜஃத் பற்றி இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர வேறு யாரும் நம்பகமானவர் என்று சான்று அளிக்கவில்லை.
- மேலும் ஸவ்பான் (ரலி) ஷாம் நாட்டைச் சேர்ந்தவர். அப்துல்லாஹ் பின் அபுல் ஜஃத் கூஃபாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடம் செவியேற்றிருக்க வாய்ப்பில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-90 .
சமீப விமர்சனங்கள்