தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-199

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நவ்வாஸ் பின் ஸம்ஆன் அல்கிலாபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

எந்த ஒரு மனித உள்ளமாயினும் அது அளவிலா அருளாளனான அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே தான் உள்ளது. அவன் நாடினால் அதை நல்வழியில் நிலைப்படுத்துகிறான். அவன் நாடினால் அதை தீயவழியில் பிறழச் செய்துவிடுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யா முஸப்பிதல் குலூப் ஸப்பித் குலூபனா அலா தீனிக் உள்ளங்களை நிலைப்படுத்துபவனே எங்கள் உள்ளங்களை உன் மார்க்கத்தில் நிலைப்படுத்துவாயாக என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

தராசு அளவிலா அருளாளனாகிய அல்லாஹ்வின் கையிலே உள்ளது. மறுமை நாள் வரை அதன் மூலம் அவன் சிலரை உயர்த்திக் கொண்டும், சிலரை தாழ்த்திக் கொண்டும் இருக்கிறான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இப்னுமாஜா: 199)

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ بُسْرَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ أَبَا إِدْرِيسَ الْخَوْلَانِيَّ، يَقُولُ: حَدَّثَنِي النَّوَّاسُ بْنُ سَمْعَانَ الْكِلَابِيُّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«مَا مِنْ قَلْبٍ إِلَّا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ، إِنْ شَاءَ أَقَامَهُ، وَإِنْ شَاءَ أَزَاغَهُ»

وَكانَ رَسُولُ اللَّهِ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ يَقُولُ: ” يَا مُثبِّتَ الْقُلُوبِ، ثبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ. قَالَ: وَالْمِيزَانُ بِيَدِ الرَّحْمَنِ، يَرْفَعُ أقْوَامًا وَيَخْفِضُ آخَرِينَ، إِلَى يَوْمِ الْقِيَامَةِ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-199.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-195.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47280-ஹிஷாம் பின் அம்மார் பின் நுஸைர் என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் பலமானவர் என்றும் புத்திசாலி என்றும் பாராட்டியுள்ளார். இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். அல்ல என்றும் கூறியுள்ளாா். மேலும் இவர் ஸுவைத் பின் அப்துல்அஸீஸ் வழியாக அறிவிக்கும் செய்திகள் (ஸுவைத் பலவீனமானவர் என்பதால்) பலவீனமானது என்றும் கூறியுள்ளார்.
  • இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அவர்கள் ஸதூக்-நம்பகமானவர் (சுமாரானவர்) என்று கூறியுள்ளார். இவ்வாறே அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோரும் கூறியுள்ளனர்.
  • அபூஸுர்ஆ அவர்கள், இவரிடமிருந்து ஹதீஸைக் கேட்காதவர்கள் 10 ஆயிரம் ஹதீஸ்களை இழக்க நேரிடும் என்று பாராட்டியுள்ளார்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் ஸதூக்-நம்பகமானவர் என்று கூறியிருப்பதுடன் இவர் மிகவும் மதிப்பு மிக்கவர்; புத்திசாலி என்று பாரட்டியுள்ளார். (இவ்வாறு இவர் குணத்தைப் பற்றி பலர் பாராட்டியுள்ளனர்.)

இவரைப் பற்றிய விமர்சனங்கள்:

1 . குர்ஆன் படைக்கப்பட்டது என்று இவர் கூறினார் என்ற தகவல் கிடைத்ததால் இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் இவரை வழித் தவறியவர், தடுமாறியவர் என்று விமர்சித்தார்…

2 . இவர் முதியவரான போது இவரின் மனனத் தன்மை மாறி விட்டது. (அப்போது அவரிடத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்துச் செய்திகளையும் மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுவார். தனக்கு சொல்லப்படுவதையெல்லாம் பிறகுக்கு எடுத்துச் சொல்பவராக இருந்தார். (அதாவது தல்கீனை ஏற்பவராக இருந்தார்…விவரம்). இதற்கு முந்தைய காலத்தில் இவர் அறிவித்தவை மிகச் சரியானது என்றும், இவர் ஸதூக் என்ற தரத்தில் உள்ளவர் என்றும் இமாம் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார். (இவர் தல்கீனை ஏற்பவர் என்று ஆரம்பகால அறிஞர் மஃன் அவர்களும் கூறியுள்ளார்)

3 . இவர் அறிவிக்கும் 400 ஹதீஸ்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம் விமர்சித்துள்ளார்.

4 . இவர் ஹதீஸை அறிவிப்பதற்கு கூலி வாங்குவார் என்று சிலர் விமர்சித்துள்ளனர்…

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/66, தஹ்தீபுல் கமால்-30/242, தாரீகுல் இஸ்லாம்-5/1272, ஸியரு அஃலாமின் நுபலா-11/420, மீஸானுல் இஃதிதால்-‌‌9234, 4/302, தத்கிரதுல் ஹுஃப்பால்-458, 2/29, தஹ்தீபுத் தஹ்தீப்-4/276, தக்ரீபுத் தஹ்தீப்-1/1022…)

1 . மேற்கண்ட 4 வகையான விமர்சனங்களுக்கும் சில அறிஞர்கள் பதில் கூறியுள்ளனர்…

2 . தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவரைப் பற்றிய குறை, நிறை விமர்சனங்களிலிருந்து இவர் பலமானவர் என்றே முடிவு செய்துள்ளார். இதற்கு அடையாளமாக இவரைப்பற்றிய குறிப்பில் صح என்று கூறியுள்ளார். இதன் கருத்து அல்அமலு அலா தவ்ஸீகிஹீ-இவர் பலமானவர் என்பதே முடிவாகும் (அமலாகும்) என்பதாகும். (மீஸானுல் இஃதிதால்-‌‌9234, 4/302).

3 . மேலும் இந்த செய்தியை இவர் மட்டும் தனித்து அறிவிக்கவில்லை. மற்றவர்களும் அறிவித்துள்ளனர் என்பதால் இது சரியான செய்தியாகும்.

1 . இந்தக் கருத்தில் நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-17630 , இப்னு மாஜா-199 , குப்ரா நஸாயீ-7691 , இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-,

 

மேலும் பார்க்க: 2. திர்மிதீ-2140 , 3. முஸ்லிம்-5161 , 4. அஹ்மத்-9420 , ..

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.