தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4752

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் பரப்பிக் கொண்டிருந்த நேரத்(தில் நீங்கள் எவ்வளவு கடும் தவற்றைச் செய்து கொண்டிருந்தீர்கள் என்ப)தைச் சற்றுச் சிந்தியுங்கள்! நீங்கள் எந்த வகையிலும் அறிந்திராத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் வாய்களால் கூறிக் கொண்டு திரிந்தீர்கள்;அதனைச் சாதாரணமாகக் கருதி விட்டீர்கள். ஆனால், அல்லாஹ்விடத்தில் அதுவோ, மிகப் பெரிய விஷயமாய் இருந்தது (எனும் 24:15ஆவது இறைவசனம்).

 இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.

(திருக்குர்ஆன் 24:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஃத் தலக்கவ்னஹு’ (உங்கள் நாவுகளால் பரப்பிக்கொண்டிருந்த நேரத்தை) எனும் பதத்தை) ஆயிஷா(ரலி) ‘இஃத் தலிகூனஹு’ (நீங்கள் பொய் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தை) என்று ஓதுவதை செவியுற்றேன்.

Book : 65

(புகாரி: 4752)

بَابُ {إِذْ تَلَقَّوْنَهُ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُمْ مَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِنْدَ اللَّهِ عَظِيمٌ} [النور: 15]

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ أَخْبَرَهُمْ، قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ

سَمِعْتُ عَائِشَةَ، ” تَقْرَأُ: إِذْ تَلِقُونَهُ بِأَلْسِنَتِكُمْ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.