தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4753

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே இவ்வாறான விஷயத்தை நாம் பேசுவது நமக்கு ஏற்றதன்று;சுப்ஹானல்லாஹ்- அல்லாஹ் தூய்மையானவன்!பெரும் அவதூறாயிற்றே இது! என்று நீங்கள் கூறியிருக்கவேண்டாமா? (எனும் 24:16 ஆவது இறைவசனம்.)

 இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) இறப்பதற்கு முன், (இறப்பின் துன்பத்தால்) அவதிக்குள்ளாக்கப்பட்டிருந்த வேளையில் (அவர்களைச் சந்திக்க) இப்னு அப்பாஸ்(ரலி) அனுமதி கோரினார்கள். ஆயிஷா(ரலி) ‘என்னை அவர் புகழ்ந்து பேசி விடுவாரோ என அஞ்சுகிறேன்’ என்றார்கள். அப்போது ‘(வந்திருப்பவர்) நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் புதல்வரும் முஸ்லிம்களில் முக்கியமானவரும் ஆவார்’ என்று சொல்லப்பட்டது. உடனே ஆயிஷா(ரலி), ‘அவரை (உள்ளே வர) அனுமதியுங்கள்’ என்று கூறினார்கள். (அன்னார் உங்ளே வந்ததும்,) ‘உங்களுக்குத் தற்போது எப்படியுள்ளது?’ என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), ‘நான் அல்லாஹ்வை அஞ்சி நடந்திருந்தால் நலத்துடனேயிருப்பேன்’ என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), ‘அல்லாஹ் நாடினால் நலத்துடனேயே இருப்பீர்கள். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களைத் தவிர வேறெந்தக் கன்னிப் பெண்ணையும் மணக்கவில்லை. நீங்கள் நிரபராதி எனும் செய்தி வானத்திலிருந்து (வேத அறிவிப்பாகவே) இறங்கிற்று’ என்று (புகழ்ந்து) கூறினார்கள். (அவர்கள் சென்றவுடன்) அவர்களுக்குப் பின்னாலேயே இப்னு ஸுபைர்(ரலி) வந்தார்கள். அப்போது ஆயிஷா(ரலி), ‘இப்னு அப்பாஸ் (என்னிடம்) வந்து என்னைப் புகழ்ந்தார். நான் முற்றாக மறக்கப்பட்டுவிட்ட (சாதாரணமான)வளாக இருந்திருக்க வேண்டும் என விரும்பினேன்’ என்று கூறினார்கள்.

Book : 65

(புகாரி: 4753)

بَابُ {وَلَوْلاَ إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُمْ مَا يَكُونُ لَنَا أَنْ [ص:106] نَتَكَلَّمَ بِهَذَا سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ} [النور: 16]

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، قَالَ

اسْتَأْذَنَ ابْنُ عَبَّاسٍ قَبْلَ مَوْتِهَا عَلَى عَائِشَةَ وَهِيَ مَغْلُوبَةٌ، قَالَتْ: أَخْشَى أَنْ يُثْنِيَ عَلَيَّ، فَقِيلَ: ابْنُ عَمِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمِنْ وُجُوهِ المُسْلِمِينَ، قَالَتْ: ائْذَنُوا لَهُ، فَقَالَ: كَيْفَ تَجِدِينَكِ؟ قَالَتْ: بِخَيْرٍ إِنِ اتَّقَيْتُ، قَالَ: «فَأَنْتِ بِخَيْرٍ إِنْ شَاءَ اللَّهُ، زَوْجَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَنْكِحْ بِكْرًا غَيْرَكِ، وَنَزَلَ عُذْرُكِ مِنَ السَّمَاءِ» وَدَخَلَ ابْنُ الزُّبَيْرِ خِلاَفَهُ، فَقَالَتْ: دَخَلَ ابْنُ عَبَّاسٍ فَأَثْنَى عَلَيَّ، وَوَدِدْتُ أَنِّي كُنْتُ نِسْيًا مَنْسِيًّا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.