தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4756

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 (இவ்வாறு) அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனும் நுண்ணறிவாள னும் ஆவான் (எனும் 24:18ஆவது இறை வசனம்).

 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்.

ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் (அவர்கள் மரணப்படுக்கையில் இருந்போது) வந்து, ‘நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத்திற்கப்பாற்பட்டவர்; (அவதூறு பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்துவிடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்’ என்று அவர்களைப் புகழ்ந்து கவிதை பாடினார்கள். ஆயிஷா(ரலி) ‘(ஹஸ்ஸானே!) நீங்கள் அப்படியில்லையே!’ என்று கூறினார்கள். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘இவரைப் போன்றவர்களை நீங்கள் உங்களிடம் வர விடுகிறீர்களா? அல்லாஹ்வோ ‘இந்த அவதூறுப் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தவர்களுக்குப் பெரும் வேதனை உண்டு’ என்று (திருக்குர்ஆன் 24:11 வது வசனத்தில்) கூறுகிறானே!’ என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா(ரலி), ‘குருடாவதைவிடப் பெரிய தண்டனை வேறெது?’ என்று கேட்டுவிட்டு, ‘அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சார்பாக (அவர்களின் மீது வசைக் கவிதை பாடிய எதிரிகளுக்குக் கவிதை மூலமே) பதிலடி கொடுத்துவந்தார்’ என்று கூறினார்கள்.

Book : 65

(புகாரி: 4756)

بَابُ {وَيُبَيِّنُ اللَّهُ لَكُمُ الآيَاتِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ} [النور: 18]

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، أَنْبَأَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ

دَخَلَ حَسَّانُ بْنُ ثَابِتٍ عَلَى عَائِشَةَ فَشَبَّبَ، وَقَالَ: حَصَانٌ رَزَانٌ مَا تُزَنُّ بِرِيبَةٍ وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُومِ الغَوَافِلِ قَالَتْ: «لَسْتَ كَذَاكَ»، قُلْتُ: تَدَعِينَ مِثْلَ هَذَا يَدْخُلُ عَلَيْكِ، وَقَدْ أَنْزَلَ اللَّهُ: {وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ} [النور: 11] فَقَالَتْ: «وَأَيُّ عَذَابٍ أَشَدُّ مِنَ العَمَى» وَقَالَتْ: «وَقَدْ كَانَ يَرُدُّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.