அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதம் (அலை) அவர்கள் பாவம் புரிந்து, பிறகு (பூமியில் இறக்கப்பட்ட போது) “ எனது இறைவா! முஹம்மதின் பொருட்டால் நீ என்னை மன்னிக்குமாறு கேட்கிறேன்” எனக் கூறினார். அதற்கு அல்லாஹ், “முஹம்மது யார் என எப்படி உனக்குத் தெரியும்?. அவரை இன்னும் நான் படைக்கவில்லையே!” என்று கூறினான்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “நீ என்னை உனது கையால் படைத்து, எனக்குள் உயிரை ஊதிய போது எனது தலையை உயர்த்தி உனது அர்ஷின் தூண்களைப் பார்த்தேன். அதில், லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என எழுதப்பட்டு இருந்தது. எனவே உன்னுடைய பெயரோடு யாரை நீ சேர்த்திருந்தாயோ அவர் மற்றவர்களை விட உனக்கு மிகவும் பிரியமானவர் என நான் அறிந்து கொண்டேன்” எனக் கூறினார்.
அதற்கு அல்லாஹ், “ஆதமே! நீ சரியாகத் தான் கூறினாய். படைப்பினங்களில் அவரே எனக்கு மிகவும் பிரியமானவர். எனவே அவரின் பொருட்டால் என்று என்னிடம் நீ கேட்டால் உனக்கு நான் மன்னிப்பு வழங்குகிறேன். முஹம்மத் இல்லாவிட்டால் உன்னை நான் படைத்திருக்க மாட்டேன்” என்று அல்லாஹ் கூறினான்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
(dalail-annubuwwah-bayhaqi-2251: 2251)حَدَّثَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، إِمْلَاءً وَقِرَاءَةً، حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ مَنْصُورٍ الْعَدْلُ إِمْلَاءً، حَدَّثَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، حَدَّثَنَا أَبُو الْحَارِثِ عَبْدُ اللهِ بْنُ مُسْلِمٍ الْفِهْرِيُّ، بِمِصْرَ، قَالَ أَبُو الْحَسَنِ هَذَا مِنْ رَهْطِ أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ، أَنْبَأَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْلَمَةَ، أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
لَمَّا اقْتَرَفَ آدَمُ الْخَطِيئَةَ، قَالَ: يَا رَبِّ أَسْأَلُكَ بِحَقِّ مُحَمَّدٍ لَمَا غَفَرْتَ لِي، فَقَالَ اللهُ عَزَّ وَجَلَّ: يَا آدَمُ وَكَيْفَ عَرَفْتَ مُحَمَّدًا وَلَمْ أَخْلُقْهُ قَالَ: لِأَنَّكَ يَا رَبِّ لَمَّا خَلَقْتَنِي بِيَدِكَ وَنَفَخْتَ فِيَّ مِنْ رُوحِكِ رَفَعَتُ رَأْسِي فَرَأَيْتُ عَلَى قَوَائِمِ الْعَرْشِ مَكْتُوبًا: لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ، فَعَلِمْتُ أَنَّكَ لَمْ تُضِفْ إِلَى اسْمِكَ إِلَّا أَحَبَّ الْخَلْقِ إِلَيْكَ، فَقَالَ اللهُ عَزَّ وَجَلَّ: صَدَقْتَ يَا آدَمُ، إِنَّهُ لَأُحِبُّ الْخَلْقِ إِلَيَّ وَإِذْ سَأَلْتَنِي بِحَقِّهِ فَقَدْ غَفَرْتُ لَكَ، وَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُكَ
تَفَرَّدَ بِهِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ مِنَ هَذَا الْوَجْهِ عَنْهُ، وَهُوَ ضَعِيفٌ، وَاللهُ أَعْلَمُ
Dalail-Annubuwwah-Bayhaqi-Tamil-.
Dalail-Annubuwwah-Bayhaqi-TamilMisc-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Shamila-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Alamiah-.
Dalail-Annubuwwah-Bayhaqi-JawamiulKalim-2251.
சமீப விமர்சனங்கள்