பாடம் : 1
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார்
நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ‘அத்தவ்பா’ எனும் (9 வது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தங்களில் ஒருவரைக் கூடவிட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டுவிட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள்’ என்று கூறினார்கள்.
நான் அவர்களிடம் , ‘அல் அன்ஃபால்’ எனும் (8 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘பத்ருப்போர் குறித்து அது அருளப்பெற்றது’ என்று பதிலளித்தார்கள். நான் ‘அல்ஹஷ்ர்’ என்று பதிலளித்தார்கள். நான் ‘அல்ஹஷ்ர்’ எனும் (59 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘பனூநளீர் குலத்தார் குறித்து அருளப் பெற்றது’ என்று பதிலளித்தார்கள்.
Book : 65
(புகாரி: 4882)سُورَةُ الحَدِيدِ
وَقَالَ مُجَاهِدٌ: {جَعَلَكُمْ مُسْتَخْلَفِينَ} [الحديد: 7]: «مُعَمَّرِينَ فِيهِ»، {مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ} [البقرة: 257]: «مِنَ الضَّلاَلَةِ إِلَى الهُدَى» [ص:147]، {فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ} [الحديد: 25]: «جُنَّةٌ وَسِلاَحٌ» {مَوْلاَكُمْ} [آل عمران: 150]: «أَوْلَى بِكُمْ»، {لِئَلَّا يَعْلَمَ أَهْلُ الكِتَابِ} [الحديد: 29]: ” لِيَعْلَمَ أَهْلُ الكِتَابِ، يُقَالُ: الظَّاهِرُ عَلَى كُلِّ شَيْءٍ عِلْمًا، وَالبَاطِنُ عَلَى كُلِّ شَيْءٍ عِلْمًا ” (أَنْظِرُونَا): «انْتَظِرُونَا»
سُورَةُ المُجَادَلَةِ
وَقَالَ مُجَاهِدٌ: {يُحَادُّونَ} [المجادلة: 5]: «يُشَاقُّونَ اللَّهَ»، {كُبِتُوا} [المجادلة: 5]: «أُخْزُوا، مِنَ الخِزْيِ»، {اسْتَحْوَذَ} [المجادلة: 19]: «غَلَبَ»
سُورَةُ الحَشْرِ
{الجَلاَءَ} [الحشر: 3]: الإِخْرَاجُ مِنْ أَرْضٍ إِلَى أَرْضٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ
قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: سُورَةُ التَّوْبَةِ، قَالَ: «التَّوْبَةُ هِيَ الفَاضِحَةُ، مَا زَالَتْ تَنْزِلُ، وَمِنْهُمْ وَمِنْهُمْ، حَتَّى ظَنُّوا أَنَّهَا لَنْ تُبْقِيَ أَحَدًا مِنْهُمْ إِلَّا ذُكِرَ فِيهَا»، قَالَ: قُلْتُ: سُورَةُ الأَنْفَالِ، قَالَ: «نَزَلَتْ فِي بَدْرٍ»، قَالَ: قُلْتُ: سُورَةُ الحَشْرِ، قَالَ: «نَزَلَتْ فِي بَنِي النَّضِيرِ»
Bukhari-Tamil-4882.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4882.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்