தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4904

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சுவார் என்று அவர்களிடம் கூறப் பட்டால், (அவர்கள்) தங்களது தலையைத் திருப்பிக் கொள்கிறார்கள். மேலும்,அவர்கள் பெரும் ஆணவத்தால் அலட்சியப்படுத்து வதை (நபியே!) நீங்கள் காண்பீர்கள் எனும் (63:5ஆவது) இறைவசனம். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) லவ்வவ் (தலையைத் திருப்பிக் கொண்டார்கள்) எனும் சொல், தங்கள் தலையை அசைத்த வண்ணம் அவர்கள் நபியைப் பரிகாசம் செய்ததைக் குறிக்கின்றது. (இதே சொல்லை இன்னோர் ஓத-ல்) லவய்த்து எனும் வினைச்சொல்லிருந்து அழுத்தமில்லாமல் (லவவ் என்று) ஓதப்படுகிறது.

 ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்

நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் என்பான், ‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்கு (-முஹாஜிர்களுக்கு) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரிடமிருந்து) விலகிச் சென்றுவிடுவர். நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து நிச்சயம், வெளியேற்றிவிடுவர்’ என்று கூறுவதை கேட்டேன். அதை நான் என் நிசிய தந்தையாரிடம் கூறினேன். என் சிறிய தந்தையார் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். (ஆனால்,) அப்துல்லாஹ்வையும் அவனுடைய ஆட்களையும் உண்மையாளர்கள் என நபியவர்கள் நம்பினார்கள். அவர்கள் வந்து, ‘நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை’ என்று சத்தியம் செய்தனர். (அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நம்பினார்கள்.) என்னை நம்ப மறுத்துவிட்டார்கள். என் வாழ்நாளில், அதற்கு முன் இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதே இல்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட்கொண்டது. எனவே, நான் என்னுடைய வீட்டில் (கவலையோடு) அமர்ந்தேன். என் சிறிய தந்தையார் (என்னிடம்), ‘நபி(ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபமடையும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைக்கவில்லை’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், ‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிறபோது, திண்ணமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கிறோம் என்று கூறுகின்றனர்’ எனும் (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அருளினான். உடனே, எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அந்த வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு, ‘ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான்’ என்று கூறினார்கள். 3

Book : 65

(புகாரி: 4904)

بَابُ قَوْلِهِ: {وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ، وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ}

حَرَّكُوا، اسْتَهْزَءُوا بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيُقْرَأُ بِالتَّخْفِيفِ مِنْ لَوَيْتُ»

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ

كُنْتُ مَعَ عَمِّي فَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ ابْنَ سَلُولَ، يَقُولُ: لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنْفَضُّوا، وَلَئِنْ رَجَعْنَا إِلَى المَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ، فَذَكَرْتُ ذَلِكَ لِعَمِّي، فَذَكَرَ عَمِّي لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَعَانِي فَحَدَّثْتُهُ، فَأَرْسَلَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُبَيٍّ وَأَصْحَابِهِ، فَحَلَفُوا مَا قَالُوا، وَكَذَّبَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَدَّقَهُمْ، فَأَصَابَنِي غَمٌّ لَمْ يُصِبْنِي مِثْلُهُ قَطُّ، فَجَلَسْتُ فِي بَيْتِي، وَقَالَ عَمِّي: مَا أَرَدْتَ إِلَى أَنْ كَذَّبَكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَقَتَكَ؟ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {إِذَا جَاءَكَ المُنَافِقُونَ قَالُوا: نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ} [المنافقون: 1] وَأَرْسَلَ إِلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَأَهَا، وَقَالَ: «إِنَّ اللَّهَ قَدْ صَدَّقَكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.