…எனது சமுதாயத்தில் உள்ள இரக்கம் கொண்டோரிடம் செல்வத்தை வேண்டுங்கள். அப்படிச் செய்தால் அவர்கள் பொறுப்பில் நீங்கள் வாழலாம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்…
(almujam-alawsat-4717: 4717)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُعَاوِيَةَ الْعُتْبِيُّ قَالَ: نَا مُوسَى بْنُ مُحَمَّدٍ الْبَلْقَاوِيُّ قَالَ: نَا مُحَمَّدُ بْنُ مَرْوَانَ السُّدِّيُّ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اطْلُبُوا الْفَضْلَ إِلَى الرُّحَمَاءِ مِنْ أُمَّتِي، تَعِيشُوا فِي أَكْنَافِهِمْ، وَلَا تَطْلُبُوهَا مِنَ الْقَاسِيَةِ قُلُوبُهُمْ، فَإِنَّهُمْ يَنْتَظِرُونَ سَخَطِي»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ إِلَّا مُحَمَّدُ بْنُ مَرْوَانَ، تَفَرَّدَ بِهِ: مُوسَى بْنُ مُحَمَّدٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4717.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-4857.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45933-மூஸா பின் முஹம்மத் பற்றி, இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ உள்ளிட்ட பலரும் இவரை பொய்யர்,كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 219)
- மேலும் ராவீ-42808-முஹம்மது பின் மர்வான் பற்றி, இவர் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் متروك - பொய் கூறக்கூடியவர் அல்லது அதிகம் தவறிழைப்பவர் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்கள் இவர் மத்ரூக்-புறக்கணிக்கப்படவேண்டியவர்-கைவிடப்பட்டவர் என்று கூறுவர்.என்று இமாம் நஸாயி மற்றும் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களும், மதிப்பற்றவர் என்று இமாம் ஸஃதீ அவர்களும், நம்பகமானவர் அல்ல என்று இமாம் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களும், இவரது செய்திகள் கண்டிப்பாக எழுதப்படாது என்று இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 26, பக்கம்: 392, 393)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சமீப விமர்சனங்கள்