தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4915

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால், (அது உங்களுக்குச் சிறந்ததாகும். ஏனெனில்,) உங்களிருவரின் இதயங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்து விட்டிருக்கின்றன எனும் (66:4ஆவது) இறைவசனம். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஸஃகத் எனும் சொல்லுக்குப் பிறழ்தல் என்று பொருள். (இதன் தன்மை வினைச் சொற் களான) ஸஃகவ்த்து மற்றும் அஸ்ஃகைத்து ஆகியவற்றுக்கு நான் சாய்ந்தேன் என்று பொருள். (6:113ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) – தஸ்ஃகா எனும் சொல்லுக்கு அவை சாய்வதற்காகஎன்று பொருள். தழாஹரூன எனும் சொல்லுக்குக் கூடிப் பேசிச் செயல் படுதல் என்று பொருள். ழஹீர்எனும் சொல்லுக்கு உதவியாளர் என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்: (66:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கூ அன்ஃபுசக்கும் வஅஹ்லீக்கும் (உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்) என்பதன் கருத்தாவது: இறையச்சத்தைக் கைக் கொள்ளுமாறு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நீங்கள் அறிவுரை பகர்வதுடன், அவர்களுக்கு ஒழுக்கத்தையும் கற்பியுங்கள்.

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்(களைச் சங்கடப்படுத்தும் வகையில், அவர்)களின் விஷயத்தில் கூடிப் பேசிச் செயல்பட்ட இரண்டு துணைவியர் யார்? என்பது பற்றி உமர்(ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று (நெடுநாள்களாக) எண்ணிக்கொண்டிருந்தேன். இவ்வாறு ஓராண்டு காலம் இருந்து விட்டேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. (இந்நிலையில் ஒரு முறை) நான் ஹஜ்ஜுக்காக உமர்(ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ‘(மர்ருழ்) ழஹ்ரான்’ எனுமிடத்தில் இருந்தபோது உமர்(ரலி) தம் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகச் சென்றபோது ‘உளு (அங்கசுத்தி) செய்வதற்கான தண்ணீரை என்னிடம் கொண்டுவாருங்கள்’ என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்காக தண்ணீர்க் குவளையை எடுத்து வந்து அவர்களுக்குத் தண்ணீரை ஊற்றலானேன். நான் (நினைத்திருந்ததைக் கேட்பதற்கு இதுதான்) சந்தர்ப்பம் எனக் கருதினேன். உடனே நான், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட அந்த இரண்டு துணைவியர் யார்?’ என்று கேட்டேன். நான் என் பேச்சை முடிப்பதற்குள், ‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம் (அவர்கள் இருவரும்)!’ என்று உமர்(ரலி) பதிலளித்தார்கள்.

Book : 65

(புகாரி: 4915)

بَابُ {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا} [التحريم: 4]

صَغَوْتُ وَأَصْغَيْتُ: مِلْتُ {لِتَصْغَى} [الأنعام: 113]: لِتَمِيلَ {وَإِنْ تَظَاهَرَا عَلَيْهِ فَإِنَّ اللَّهَ هُوَ مَوْلاَهُ وَجِبْرِيلُ، وَصَالِحُ المُؤْمِنِينَ وَالمَلاَئِكَةُ بَعْدَ ذَلِكَ ظَهِيرٌ} [التحريم: 4]: عَوْنٌ تَظَاهَرُونَ تَعَاوَنُونَ ” وَقَالَ مُجَاهِدٌ: {قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ} [التحريم: 6]: «أَوْصُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَأَدِّبُوهُمْ»

حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ عُبَيْدَ بْنَ حُنَيْنٍ، يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ

كُنْتُ أُرِيدُ أَنْ أَسْأَلَ عُمَرَ عَنِ المَرْأَتَيْنِ اللَّتَيْنِ تَظَاهَرَتَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَكَثْتُ سَنَةً، فَلَمْ أَجِدْ لَهُ مَوْضِعًا حَتَّى خَرَجْتُ مَعَهُ حَاجًّا، فَلَمَّا كُنَّا بِظَهْرَانَ ذَهَبَ عُمَرُ لِحَاجَتِهِ، فَقَالَ: أَدْرِكْنِي بِالوَضُوءِ فَأَدْرَكْتُهُ بِالإِدَاوَةِ، فَجَعَلْتُ أَسْكُبُ عَلَيْهِ المَاءَ، وَرَأَيْتُ مَوْضِعًا فَقُلْتُ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، مَنِ المَرْأَتَانِ اللَّتَانِ تَظَاهَرَتَا؟ قَالَ ابْنُ عَبَّاسٍ: فَمَا أَتْمَمْتُ كَلاَمِي حَتَّى قَالَ: «عَائِشَةُ، وَحَفْصَةُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.