தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4962

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

ஆகவே எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் (மறுமையில்) அதனையும் கண்டுகொள்வார் எனும் (99:7ஆவது) இறைவசனம்.

(99:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அவ்ஹா லஹா (வஹீ மூலம் அதற்கு அறி வித்தான்) எனும் (சொல்லின் நான்கெழுத்து) வினைச்சொல்லும், அவ்ஹா இலைஹா எனும் சொல்லும், (மூன்றெழுத்து வினைச் சொற்களான) வஹா லஹா , வஹா இலைஹா ஆகியனவும் (பொருளில்) ஒன்றேயாகும்.

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

குதிரை (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்.) ஒரு மனிதருக்கு நற்பலன் பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்கு பாவச் சுமையாகும்.

அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகப் பசுமையான ஒரு ‘வெட்ட வெளியில்’ அல்லது ‘தோட்டத்தில்’ ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டிவைத்திருக்கும்) கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்கு ‘அந்தப் பசும் புல்வெளியில்’ அல்லது ‘அந்தத் தோட்டத்தில்’ மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அது தன் கயிற்றினைத் துண்டித்துக் கொண்டு ஓரிருமுறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகளும், கெட்டிச் சாணங்களும் கூட அவருக்கு நன்மைகளாக மாறும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (குதிரையின் உரிமையாளரான) அவருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவருக்குரிய நன்மையாகவே ஆகும்.

இன்னொருவர் தம் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கிறவராவார். மேலும், அதனுடைய பிடரியின் (ஸகாத்தை செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கி வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவராவார். இப்படிப்பட்டவருக்கு, (அவருடைய) இந்தக் குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும்.

மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் (சன்மார்க்கத்தாருடன்) பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கிறவன் ஆவான். அதன் காரணத்தால், அது அவனுக்குப் பாவச் சுமையாக மாறிவிடுகிறது.

அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அவற்றைக் குறித்து எந்தக் கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை’ ‘அணுவளவு நன்மை செய்தவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், அணுவளவு தீமை புரிந்தவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டு கொள்வார்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (திருக்குர்ஆன் 99:7,8) வசனங்களைத் தவிர’ என்று கூறினார்கள். 2

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book : 65

(புகாரி: 4962)

بَابُ

سُورَةِ إِذَا زُلْزِلَتِ الأَرْضُ زِلْزَالَهَا

قَوْلُهُ: {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ} [الزلزلة: 7] يُقَالُ: {أَوْحَى لَهَا} [الزلزلة: 5] أَوْحَى إِلَيْهَا، وَوَحَى لَهَا وَوَحَى إِلَيْهَا وَاحِدٌ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

الخَيْلُ لِثَلاَثَةٍ: لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ: فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَأَطَالَ لَهَا فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ فِي المَرْجِ وَالرَّوْضَةِ، كَانَ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ، كَانَتْ آثَارُهَا وَأَرْوَاثُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَ بِهِ كَانَ ذَلِكَ حَسَنَاتٍ لَهُ، فَهِيَ لِذَلِكَ الرَّجُلِ أَجْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا تَغَنِّيًا وَتَعَفُّفًا، وَلَمْ يَنْسَ حَقَّ اللَّهِ فِي رِقَابِهَا وَلاَ ظُهُورِهَا، فَهِيَ لَهُ سِتْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِئَاءً وَنِوَاءً، فَهِيَ عَلَى ذَلِكَ وِزْرٌ ”
فَسُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الحُمُرِ، قَالَ: ” مَا أَنْزَلَ اللَّهُ عَلَيَّ فِيهَا إِلَّا هَذِهِ الآيَةَ الفَاذَّةَ الجَامِعَةَ: {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ، وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ} [الزلزلة: 8]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.