தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4172

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அப்துல்லாஹ் பின் குதாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு கூட்டத்தினருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சந்திக்க வந்தேன். எங்களில் ஒவ்வொருவரும் ஒரு தேவைக்காக வந்திருந்தனர். அவர்களில், நானே கடைசியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை பார்க்க சென்றேன். அப்போது நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே!எங்களில் சிலர், ஹிஜ்ரத் முடிவடைந்து விட்டது என்ற எண்ணத்தில் உள்ளனர் என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், இறைமறுப்பாளர்களுடன் யுத்தம் நடைபெறும் காலமெல்லாம் ஹிஜ்ரத் முடிவடையாது என்று கூறினார்கள்.

(நஸாயி: 4172)

أَخْبَرَنَا عِيسَى بْنُ مُسَاوِرٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْعَلَاءِ بْنِ زَبْرٍ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَقْدَانَ السَّعْدِيِّ قَالَ:

وَفَدْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَفْدٍ كُلُّنَا يَطْلُبُ حَاجَةً، وَكُنْتُ آخِرَهُمْ دُخُولًا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي تَرَكْتُ مَنْ خَلْفِي وَهُمْ يَزْعُمُونَ أَنَّ الْهِجْرَةَ قَدِ انْقَطَعَتْ، قَالَ: «لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ مَا قُوتِلَ الْكُفَّارُ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4172.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4126.




  • இந்த செய்தியில் ஹிஜ்ரத் முடிவடையாது என்று உள்ளது. புகாரீ-2783 போன்ற ஹதீஸ்களில் மக்கா வெற்றிக்கு பின் ஹிஜ்ரத் இல்லை என்று வந்துள்ளது. இரண்டு செய்திகளும் சரியானவை என்பதால் முரண்படாத வகையில் சிலர் விளக்கம் கொடுத்துள்ளனர்.
  • கத்தாபீ பிறப்பு ஹிஜ்ரி 319
    இறப்பு ஹிஜ்ரி 388
    வயது: 69
    அவர்கள், ஆரம்பக்காலத்தில் ஹிஜ்ரத் செய்வது நல்லது என்று இருந்தது. “அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்பவர் பூமியில் அதிகமான புகலிடங்களையும், வசதிகளையும் பெற்றுக் கொள்வார். அல்லாஹ்வை நோக்கியும், அவனது தூதரை நோக்கியும் ஹிஜ்ரத் செய்து தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் செல்பவருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்குரிய கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:100) என்ற வசனம் இந்தக் கருத்தைத் தருகிறது. பின்பு நபி (ஸல்) ஹிஜ்ரத் செய்த போது அவர்களைப் பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஹிஜ்ரத் செய்வது கடமையாக்கப்பட்டது. பின்பு மக்கா வெற்றி கிடைத்த பின்பு பழைய நிலைப்படி நல்லது என்ற சட்டத்தில் வந்துவிட்டது என்று கூறுகிறார்.
  • சிலர் புகாரியில் இடம்பெரும் ஹதீஸ் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் இல்லை என்றும், இந்த செய்தி இறைமறுப்பாளர்களின் தொல்லை எங்கு இருந்தாலும், எப்போது இருந்தாலும் அப்போது ஹிஜ்ரத் உள்ளது என்பதை குறிப்பிடுகிறது என்றும் கூறியுள்ளனர்.

1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் குதாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-1671 , முஸ்னத் பஸ்ஸார்-1054 , நஸாயீ-4172 , குப்ரா நஸாயீ-7747 , 7748 , 8654 , 8655 , 8656 , இப்னு ஹிப்பான்-4866 , அல்முஃஜமுல் கபீர்-895 , அல்முஃஜமுல் அவ்ஸத்-59 , குப்ரா பைஹகீ-17779 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-2479 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.