பாடம்: 16
நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற எண்ணினால், தொலைவான இடத்திற்குச் செல்வார்கள் என்பது குறித்து வந்துள்ளவை.
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகத் தொலைவான இடத்திற்குச் சென்றார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அப்துர்ரஹ்மான் பின் அபூகுராத் (ரலி), அபூகதாதா (ரலி), ஜாபிர் (ரலி), உபைத் (ரலி), அபூமூஸா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), பிலால் பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
“நபி (ஸல்) அவர்கள் தங்குவதற்காக மென்மையான இடத்தைத் தேர்வு செய்வதைப் போன்று சிறுநீர் கழிப்பதற்கும் மென்மையான இடத்தைத் தேர்வு செய்வார்கள்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(இந்த ஹதீஸின் நான்காவது அறிவிப்பாளரான) அபூஸலமா (ரஹ்) அவர்களின் இயற்பெயர் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ என்பதாகும்.
(திர்மிதி: 20)بَابُ مَا جَاءَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ الْحَاجَةَ أَبْعَدَ فِي الْمَذْهَبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ:
كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاجَتَهُ، فَأَبْعَدَ فِي الْمَذْهَبِ،
وَفِي الْبَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي قُرَادٍ، وَأَبِي قَتَادَةَ، وَجَابِرٍ، وَيَحْيَى بْنِ عُبَيْدٍ، عَنْ أَبِيهِ، وَأَبِي مُوسَى، وَابْنِ عَبَّاسٍ، وَبِلَالِ بْنِ الْحَارِثِ. هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
وَيُرْوَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ يَرْتَادُ لِبَوْلِهِ مَكَانًا كَمَا يَرْتَادُ مَنْزِلًا وَأَبُو سَلَمَةَ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ الزُّهْرِيُّ
Tirmidhi-Tamil-20.
Tirmidhi-TamilMisc-20.
Tirmidhi-Shamila-20.
Tirmidhi-Alamiah-20.
Tirmidhi-JawamiulKalim-20.
சமீப விமர்சனங்கள்