தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5081

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 11

(வயதில்) சிறியவர்களைப் பெரியவர்களுக்கு மணமுடித்து வைத்தல்.

 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும், வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்” என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 67

(புகாரி: 5081)

بَابُ تَزْوِيجِ الصِّغَارِ مِنَ الكِبَارِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ عِرَاكٍ، عَنْ عُرْوَةَ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ عَائِشَةَ إِلَى أَبِي بَكْرٍ، فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ: إِنَّمَا أَنَا أَخُوكَ، فَقَالَ: «أَنْتَ أَخِي فِي دِينِ اللَّهِ وَكِتَابِهِ، وَهِيَ لِي حَلاَلٌ»


Bukhari-Tamil-5081.
Bukhari-TamilMisc-5081.
Bukhari-Shamila-5081.
Bukhari-Alamiah-4691.
Bukhari-JawamiulKalim-4716.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . அப்துல்லாஹ் பின் யூஸுஃப்

3 . லைஸ் பின் ஸஃத்

4 . யஸீத் பின் ஸுவைத்-யஸீத் பின் அபூஹபீப்-அபூரஜாஃ

5 . இராக் பின் மாலிக்

6 . உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


  • இந்தச் செய்தி, வெளிப்படையில் பார்க்கும் போது முர்ஸலாக தெரிகிறது. அதாவது உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் தாபிஈ ஆவார். நபி (ஸல்) அவர்களை சந்திக்கவில்லை.
  • என்றாலும் இந்த செய்தியை தனது சின்னம்மாவான ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களிடமிருந்தோ அல்லது தனது தாயாரான அஸ்மா (ரலி) அவர்களிடமிருந்தோ கேட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே தான் இதை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் தனது ஸஹீஹில் பதிவு செய்துள்ளார் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்ற சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இந்தக் கருத்தில் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-5081, குப்ரா பைஹகீ-13916,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-3894, முஸ்லிம்-2778, 2781,


 

1 comment on Bukhari-5081

  1. நபி முஹம்மத் ஸல் அவர்களின் , எந்த திருமணமும் அன்னை ஆயிஷா உடனான திருமணம் அளவிற்கு விமரிசிக்க படவில்லை .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.