தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5105

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்ட பெண்களும் அனுமதிக்கப்படாதவர்களும். அல்லாஹ் கூறுகின்றான்: (பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், மற்றும் உங்கள் தந்தையின் சகோதரிகள்,உங்கள் அன்னையின் சகோதரிகள்; மேலும் சகோதரனின் புதல்வியர்; சகோதரியின் புதல்வியர்… (4:23) அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (4:24ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வல் முஹ்ஸனாத்து மினன் னிஸா’ என்பதன் கருத்தாவது: (ஏற்கெனவே திருமணமாகி) கணவன்மார்கள் இருக்கும் (அடிமையல்லாத) சுதந்திரமான பெண்களை மணமுடிப்பது விலக்கப்பட்டதாகும். இல்லா மா மலக்கத் அய்மானுக்கும்’ (உங்கள் கைவசம் வந்து விட்ட அடிமைப்பெண்களைத் தவிர) என்பதன் கருத்தாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணை (அவளுடைய கணவரான) தம் அடிமையின் மண பந்தத்திலிருந்து விலக்கி விடுவது குற்றமன்று. மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இறைவனுக்கு இணைவைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் (ஏகத்துவ நம்பிக்கை) கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். (2:221) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் தாய், தம் புதல்வி, மற்றும் தம் சகோதரியை மணமுடிப்பது விலக்கப்பட்டிருப்பது போன்றே நான்கை விட அதிகமான பெண்களை மணமுடிப்பதும் விலக்கப்பட்டதாகும்.

 ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

”இரத்த உறவினால் ஏழு பேரும், திருமண உறவினால் ஏழு பேரும் மணமுடிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டுள்ளனர்.41 என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறிவிட்டு, ‘(பின்வரும் பெண்களை மணப்பது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள்..” எனும் (திருக்குர்ஆன் 04:23 வது) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு ‘அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி), அலீ(ரலி) அவர்களின் புதல்வியையும், அலீ(ரலி) (அவர்களுக்குப் பின்) அவர்களின் மனைவியையும் ஒரே நேரத்தில் மணந்தார்கள்” என்றும் கூறினார்கள். 42

”ஒருவர், ஒரு பெண்ணையும் அவளுடைய கணவரின் (இன்னொரு மனைவிக்குப் பிறந்த) மகளையும் ஒரே நேரத்தில் மணமுடிப்பது குற்றமன்று” என இப்னு சீரீன்(ரஹ்) கூறினார்கள்.

இது வெறுக்கப்பட்ட செயலாகும் என முதலில் கூறிவந்த ஹஸனுல் பஸரி(ரஹ்), பின்னர் (தம் கருத்தை மாற்றிக் கொண்டு) இதனால் குற்றமில்லை என்று கூறினார்கள்.

(அலீ(ரலி) அவர்களின் பேரரான) ஹஸன் இப்னு ஹஸன் இப்னி அலீ(ரஹ்) தம் தந்தையின் இரண்டு சகோதரர்களின் புதல்வியரை ஒரே இரவில் மணந்துகொண்டார்கள். 43

இதனால் (சக்களத்தி சண்டை ஏற்பட்டு) உறவு முறிய வாய்ப்புண்டு என்பதால் இத்திருமணத்தை ஜாபிர் இப்னு ஸைத்(ரஹ்) வெறுத்தார்கள். ஆனால், (இத்திருமணம்) தடை செய்யப்பட்டதன்று. ஏனெனில், அல்லாஹ் (மணமுடிக்கத் தகாத பெண்களின் பட்டியலைச் சொல்லிவிட்டு) ‘இவர்களைத் தவிர மற்ற பெண்களை (மஹ்ர் கொடுத்து) அடைந்து கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” (திருக்குர்ஆன் 04:24) என்று கூறுகிறான்.

இக்ரிமா(ரஹ்) கூறினார்

”ஒருவன் தன் மனைவியின் சகோதரியை விபசாரம் செய்வதால், அவனுடைய மனைவி அவனுக்கு விலக்கப்பட்டவளாக, (ஹராமாக) ஆம்விடமாட்டாள்” என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். 44

ஒருவன் ஒரு சிறுவனுடன் ஓரினச் சேர்க்கை செய்தால், அச்சிறுவனுடைய தாயை மணமுடிப்பது செல்லாது என ஷஅபீ (ரஹ்) அவர்களும், அபூ ஜஅஃபர்(ரஹ்) அவர்களும் கூறினார்கள்கள் என யஹ்யா(ரஹ்) கூறினார்கள். இந்த யஹ்யா நேர்மையானவரா என்பது அறியப்படவில்லை. இந்த அறிவிப்புக்கு பக்கபலமாக அமையும் மற்ற அறிவிப்புகளும் கிடையாது.

இக்ரிமா(ரஹ்) கூறினார்: ‘ஒருவன் தன் மனைவியின் தாயுடன் விபசாரம் புரிந்துவிட்டால், மனைவி அவனுக்கு விலக்கப்பட்டவளாக ஆகமாட்டாள்” என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். ஆனால், ‘விலக்கப்பட்டவளாக ஆம்விடுவாள்” என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் என அபூ நஸ்ர்(ரஹ்) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபூ நஸ்ர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து செவியேற்றாரா என்பது அறியப்படவில்லை.

‘விலக்கப்பட்டவளாக ஆம்விடுவாள்’ என்பதே இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி), ஜாபிர் இப்னு ஸைத்(ரஹ்), ஹஸன் அல்பஸரி(ரஹ்) மற்றும் இராக் அறிஞர்களில் சிலர் ஆகியோரின் கருத்தாகும்.

அபூ ஹுரைரா(ரலி) கூறினார்: ஒரு பெண்ணை உடலுறவு கொண்டால் மட்டுமே அவளுடைய மகள் இவனுக்கு விலக்கப்பட்டவள் ஆவாள். (வெறுமனே தொடுவதற்கும், கட்டி அணைப்பதற்கும் இச்சட்டம் பொருந்தாது.) (”இந்நிலையில் அப்பெண்ணின்) மகளை மணமுடிப்பது செல்லும்’ என இப்னுல் முஸய்யப், உர்வா, ஸுஹ்ரீ(ரஹ்) ஆகியோர் கூறினர்.

‘அவளை மணமுடிப்பது விலக்கப்படவில்லை’ என அலீ(ரலி) சொன்னதாக ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசை முறிவு கண்டது (முர்சல் எனும் முன்கத்திஉ) ஆகும்.

Book : 67

(புகாரி: 5105)

بَابُ مَا يَحِلُّ مِنَ النِّسَاءِ وَمَا يَحْرُمُ

وَقَوْلِهِ تَعَالَى: {حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالاَتُكُمْ وَبَنَاتُ الأَخِ وَبَنَاتُ الأُخْتِ} [النساء: 23]- إِلَى آخِرِ الآيَتَيْنِ إِلَى قَوْلِهِ – {إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا} [النساء: 11]

وَقَالَ أَنَسٌ: {وَالمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ} [النساء: 24] «ذَوَاتُ الأَزْوَاجِ الحَرَائِرُ حَرَامٌ» {إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ} [النساء: 24] «لاَ يَرَى بَأْسًا أَنْ يَنْزِعَ الرَّجُلُ جَارِيَتَهُ مِنْ عَبْدِهِ» وَقَالَ: {وَلاَ تَنْكِحُوا المُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ} [البقرة: 221]

وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «مَا زَادَ عَلَى أَرْبَعٍ فَهُوَ حَرَامٌ، كَأُمِّهِ وَابْنَتِهِ وَأُخْتِهِ»

وَقَالَ لَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي حَبِيبٌ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ

«حَرُمَ مِنَ النَّسَبِ سَبْعٌ، وَمِنَ الصِّهْرِ سَبْعٌ» ثُمَّ قَرَأَ: {حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ} [النساء: 23]
[ص:11] الآيَةَ

وَجَمَعَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، بَيْنَ ابْنَةِ عَلِيٍّ وَامْرَأَةِ عَلِيٍّ وَقَالَ ابْنُ سِيرِينَ: «لاَ بَأْسَ بِهِ» وَكَرِهَهُ الحَسَنُ مَرَّةً، ثُمَّ قَالَ: «لاَ بَأْسَ بِهِ»

وَجَمَعَ الحَسَنُ بْنُ الحَسَنِ بْنِ عَلِيٍّ، بَيْنَ ابْنَتَيْ عَمٍّ فِي لَيْلَةٍ، وَكَرِهَهُ جَابِرُ بْنُ زَيْدٍ، لِلْقَطِيعَةِ، وَلَيْسَ فِيهِ تَحْرِيمٌ، لِقَوْلِهِ تَعَالَى: {وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ} [النساء: 24]

وَقَالَ عِكْرِمَةُ، عَنْ ابْنِ عَبَّاسٍ، «إِذَا زَنَى بِأُخْتِ امْرَأَتِهِ لَمْ تَحْرُمْ عَلَيْهِ امْرَأَتُهُ» وَيُرْوَى عَنْ يَحْيَى الكِنْدِيِّ، عَنِ الشَّعْبِيِّ، وأَبِي جَعْفَرٍ، فِيمَنْ يَلْعَبُ بِالصَّبِيِّ: «إِنْ أَدْخَلَهُ فِيهِ فَلاَ يَتَزَوَّجَنَّ أُمَّهُ» وَيَحْيَى هَذَا غَيْرُ مَعْرُوفٍ، وَلَمْ يُتَابَعْ عَلَيْهِ

وَقَالَ عِكْرِمَةُ، عَنْ ابْنِ عَبَّاسٍ: «إِذَا زَنَى بِهَا لَمْ تَحْرُمْ عَلَيْهِ امْرَأَتُهُ» وَيُذْكَرُ عَنْ أَبِي نَصْرٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، حَرَّمَهُ «وَأَبُونَصْرٍ هَذَا لَمْ يُعْرَفْ بِسَمَاعِهِ مِنْ ابْنِ عَبَّاسٍ»
وَيُرْوَى عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، وَجَابِرِ بْنِ زَيْدٍ، وَالحَسَنِ، وَبَعْضِ أَهْلِ العِرَاقِ تَحْرُمُ عَلَيْهِ

وَقَالَ أَبُو هُرَيْرَةَ: «لاَ تَحْرُمُ حَتَّى يُلْزِقَ بِالأَرْضِ» يَعْنِي يُجَامِعَ وَجَوَّزَهُ ابْنُ المُسَيِّبِ وَعُرْوَةُ، وَالزُّهْرِيُّ وَقَالَ الزُّهْرِيُّ: قَالَ عَلِيٌّ: «لاَ تَحْرُمُ» وَهَذَا مُرْسَلٌ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.