பாடம் : 101 கன்னிகழிந்த பெண்(ணான மனைவி) இருக்க கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால்…?
(நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) உம்மு ஹபீபா(ரலி) அறிவித்தார்
நான் (ஒருமுறை) ‘இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரியான) அபூ சுஃப்யானின் மகளின் விஷயத்தில் தங்களுக்கு விருப்பம் உண்டா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்கள். நான், ‘(அவளை) நீங்கள் மணந்துகொள்ள வேண்டும்” என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘இதை நீயே விரும்புகிறாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘(ஆம்!) மனைவியென்று உங்களுக்கு நான் ஒருத்தி மட்டுமில்லையே! தங்களை அடைந்து கொள்ளும் பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவள் எனக்கு (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் இல்லையே!” என்று கூறினார்கள். நான், ‘தாங்கள் பெண் கேட்டதாக எனக்குச் செய்தி எட்டியதே!” என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(என் துணைவியார்) உம்மு ஸலமாவின் மகளையா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவள் என் மடியில் வளர்ந்த வளர்ப்பு மகளாக (இருக்கிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவள் எனக்கு (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவள் அல்லள். (ஏனெனில்,) எனக்கும் அவளுடைய தந்தை (‘அபூ ஸலமா’)வுக்கும் ஸுவைபா அவர்களே பாலூட்டினார்கள். எனவே, உங்களுடைய பெண்மக்களையோ, சகோதரிகளையோ என்னிடம் (மணந்துகொள்ளுமாறு) பரிந்துரைக்காதீர்கள்” என்றார்கள். 49
லைஸ் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்:
(அறிவிப்பாளர்) ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்), உம்மு ஸலமா(ரலி) அவர்களின் மகளின் பெயர் ‘துர்ரா பின்த் அபீ ஸலமா’ என்றே நமக்கு அறிவித்தார்கள்.
Book : 67
(புகாரி: 5106)بَابُ {وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ} [النساء: 23]
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «الدُّخُولُ وَالمَسِيسُ وَاللِّمَاسُ هُوَ الجِمَاعُ» وَمَنْ قَالَ: بَنَاتُ وَلَدِهَا مِنْ بَنَاتِهِ فِي التَّحْرِيمِ لِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُمِّ حَبِيبَةَ: «لاَ تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ» وَكَذَلِكَ حَلاَئِلُ وَلَدِ الأَبْنَاءِهُنَّ حَلاَئِلُ الأَبْنَاءِ، وَهَلْ تُسَمَّى الرَّبِيبَةَ وَإِنْ لَمْ تَكُنْ فِي حَجْرِهِ وَدَفَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَبِيبَةً لَهُ إِلَى مَنْ يَكْفُلُهَا وَسَمَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنَ ابْنَتِهِ ابْنًا
حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، قَالَتْ
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ لَكَ فِي بِنْتِ أَبِي سُفْيَانَ؟ قَالَ: «فَأَفْعَلُ مَاذَا؟» قُلْتُ: تَنْكِحُ، قَالَ: «أَتُحِبِّينَ؟» قُلْتُ: لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ شَرِكَنِي فِيكَ أُخْتِي، قَالَ: «إِنَّهَا لاَ تَحِلُّ لِي»، قُلْتُ: بَلَغَنِي أَنَّكَ تَخْطُبُ، قَالَ: «ابْنَةَ أُمِّ سَلَمَةَ»، قُلْتُ: نَعَمْ، قَالَ: «لَوْ لَمْ تَكُنْ رَبِيبَتِي مَا حَلَّتْ لِي، أَرْضَعَتْنِي وَأَبَاهَا ثُوَيْبَةُ، فَلاَ تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ» وَقَالَ اللَّيْثُ، حَدَّثَنَا هِشَامٌ: دُرَّةُ بِنْتُ أَبِي سَلَمَةَ
சமீப விமர்சனங்கள்