தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5124

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்

”(‘இத்தா’வில் இருக்கும்) பெண்களிடம் திருமணப் பேச்சை மறைமுகமாக எடுத்துரைப்பதில் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை” எனும் (திருக்குர்ஆன் 02:235 வது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு அப்பாஸ்(ரலி), ‘ஒருவர், ‘(இத்தா’விலிருக்கும் ஒரு பெண்ணிடம்) ‘நான் மணமுடித்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்றோ ‘ஒரு நல்ல பெண் எனக்கு விரைவில் கிடைப்பாள் என நம்புகிறேன்’ என்றோ (சாடையாகக்) கூறுவதாகும்” என்று கூறினார்கள்.

காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) கூறினார்: நீ என்னிடம் மதிப்புக்குரியவள்; நான் உன்னை விரும்புகிறேன்; அல்லாஹ் உனக்கு நன்மைபுரிவான் என்பன போன்ற வார்த்தைகளைக் கூறுவதாகும்.

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்கள்: (இத்தாவில் இருக்கும் பெண்ணிடம் தம் திருமண விருப்பத்தை) ஒருவர் மறை முகமாகச் சொல்ல வேண்டும்; வெளிப்படையாகச் சொல்லக் கூடாது. (உதாரணமாக) ‘எனக்கு ஒரு தேவை உள்ளது’ என்றோ அல்லது ‘ஒரு மகிழ்ச்சியான செய்தி உனக்கு (காத்திருக்கிறது)’ என்றோ, ‘அல்லாஹ்வின் அருளால் நீ கடைத்தேறிவிடுவாய்’ என்றோ கூறுவார். அதற்கு (பதிலாக) அவள், ‘நீங்கள் சொல்வதை நான் செவியேற்றேன்” என்று மட்டும் சொல்வாள். அவனுக்கு எந்த வாக்குறுதியையும் அவள் அளிக்கக் கூடாது. (இதைப்போன்றே) அவளுடைய காப்பாளரும் அவளுக்குத் தெரியாமல் (யாருக்கும்) வாக்குக் கொடுக்கக் கூடாது. ‘இத்தா’க் காலத்தில் வைத்தே ஒரு பெண் ஒரு மனிதருக்கு (மணமுடிக்க) வாக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு (வாக்குக் கொடுத்தபடி) இருவரும் மணந்தால் இருவருக்கு மத்தியில் மணமுறிவு ஏற்படுத்தப்படாது.

”(திருக்குர்ஆன் 02:235 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அஸ்ஸிர்ரு’ (இரகசியம்) எனும் சொல்லுக்கு ‘விபசாரம்’ என்று பொருள்’ என ஹஸன் அல் பஸரி(ரஹ்) கூறினார்கள்.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ஹத்தா யப்லுஃகல் கிதாபு அஜலஹு (குறித்த தவணை முடிகிற வரை) என்பது ‘இத்தா’ முடிவதைக் குறிக்கும் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :67

(புகாரி: 5124)

بَابُ قَوْلِ اللَّهِ جَلَّ وَعَزَّ: {وَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُمْ بِهِ مِنْ خِطْبَةِ النِّسَاءِ، أَوْ أَكْنَنْتُمْ فِي أَنْفُسِكُمْ عَلِمَ اللَّهُ} [البقرة: 235]- الآيَةَ إِلَى قَوْلِهِ – {غَفُورٌ حَلِيمٌ} [البقرة: 225] {أَوْ أَكْنَنْتُمْ} [البقرة: 235]

أَضْمَرْتُمْ، وَكُلُّ شَيْءٍ صُنْتَهُ وَأَضْمَرْتَهُ فَهُوَ مَكْنُونٌ

وَقَالَ لِي طَلْقٌ: حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ

{فِيمَا عَرَّضْتُمْ بِهِ مِنْ خِطْبَةِ النِّسَاءِ} [البقرة: 235] يَقُولُ: «إِنِّي أُرِيدُ التَّزْوِيجَ، وَلَوَدِدْتُ أَنَّهُ تَيَسَّرَ لِي امْرَأَةٌ صَالِحَةٌ» وَقَالَ القَاسِمُ: «يَقُولُ إِنَّكِ عَلَيَّ كَرِيمَةٌ، وَإِنِّي فِيكِ لَرَاغِبٌ، وَإِنَّ اللَّهَ لَسَائِقٌ إِلَيْكِ خَيْرًا، أَوْ نَحْوَ هَذَا» وَقَالَ عَطَاءٌ: ” يُعَرِّضُ وَلاَ يَبُوحُ، يَقُولُ: إِنَّ لِي حَاجَةً، وَأَبْشِرِي، وَأَنْتِ بِحَمْدِ اللَّهِ نَافِقَةٌ، وَتَقُولُ هِيَ: قَدْ أَسْمَعُ مَا تَقُولُ، وَلاَ تَعِدُ شَيْئًا، وَلاَ يُوَاعِدُ وَلِيُّهَا بِغَيْرِ عِلْمِهَا، وَإِنْ وَاعَدَتْ رَجُلًا فِي عِدَّتِهَا، ثُمَّ نَكَحَهَا بَعْدُ لَمْ يُفَرَّقْ بَيْنَهُمَا ” وَقَالَ الحَسَنُ، {لاَ تُوَاعِدُوهُنَّ سِرًّا} [البقرة: 235] «الزِّنَا» وَيُذْكَرُ عَنْ ابْنِ عَبَّاسٍ: {حَتَّى يَبْلُغَ الكِتَابُ أَجَلَهُ} [البقرة: 235]: «تَنْقَضِيَ العِدَّةُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.