தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1079

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும், வாங்குவதையும், தவறிப்போனவற்றைத் தேடுவதையும், கவிதை பாடுவதையும், ஜூம்ஆ தொழுகைக்கு முன்னர் வட்டமாக அமர்வதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(அபூதாவூத்: 1079)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ،

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الشِّرَاءِ وَالْبَيْعِ فِي الْمَسْجِدِ، وَأَنْ تُنْشَدَ فِيهِ ضَالَّةٌ، وَأَنْ يُنْشَدَ فِيهِ شِعْرٌ، وَنَهَى عَنِ التَّحَلُّقِ قَبْلَ الصَّلَاةِ يَوْمَ الْجُمُعَةِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1081.
Abu-Dawood-Shamila-1079.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-913.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41097-இப்னு அஜ்லான் அறிவிக்கும் சில அறிவிப்பாளர்தொடர்களில் மட்டுமே விமர்சனம் உள்ளது.

1. இவர், நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தி.

2. இவர், ஸயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) கூறியதாக அறிவிக்கும் செய்தி.

(கூடுதல் தகவல் பார்க்க: இப்னு அஜ்லான் , அரபியில்: محمد بن عجلان ثقة أم صدوق؟)

  • அதில் இந்த அறிவிப்பாளர்தொடர் இல்லை என்பதால் இது சரியான செய்தியாகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-6676 , 6991 , இப்னு மாஜா-749 , 766 , 1133 , அபூதாவூத்-1079 , திர்மிதீ-322 ,  நஸாயீ-714 , 715 ,

4 comments on Abu-Dawood-1079

  1. சலாம்.

    இந்த ஹதீஸில் ‘கவிதை பாடுவதை தடுத்தார்கள்’ என்ற வாசகம் விடுபட்டுள்ளது. இந்த ஹதீஸின் தமிழ் மொழிபெயர்ப்பு எண் 911. தமிழ் MISc எண் என நீங்கள் கொடுத்துள்ளது எந்த எண்? TNTJ ஆலிம் மொழிபெயர்த்த அபூதாவூத் முதல் பாகத்தின் ஆப்பில் நீங்கள் குறிப்பிட்ட ஷாமிலா எண் தான் உள்ளது.

    1. வ அலைக்கும் ஸலாம்.

      ஜஸாகல்லாஹு கைரா. மொழிபெயர்ப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.

        1. அஸ்ஸலாமு அலைக்கும். தற்போது ஹதீஸ்களை பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய ஹதீஸ்களை ஏற்றுதல், மொழிபெயர்த்தல், தரம் பார்த்தல், அதனை சரிபார்த்தல், கேள்விகளுக்குரிய பதில்கள், மறு ஆய்வு என ஒவ்வொரு வேலைகளுக்கும் நேரம் ஒதுக்கப்படும். அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும். இன்ஷா அல்லாஹ், எந்த கேள்வியும் பதில் அளிக்கப்படாமல் விடப்படாது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.