தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5254

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 3

தம் மனைவியை மணவிலக்குச் செய்யும் ஒருவர், அதை மனைவியிடமே நேரடியாகத் தெரிவிக்கலாமா?

 அப்துர்ரஹ்மான் பின் அல்அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், ‘‘(நபி (ஸல்) அவர்களிடம்) ‘நான் தங்களிடமிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று அவர்களுடைய துணைவியரில் யார் கூறியது?” எனக் கேட்டேன். அதற்கு ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துரைத்தபடி உர்வா (ரஹ்) அவர்கள் அறிவித்த (பின்வரும்) ஹதீஸைக் கூறினார்கள்:

‘அல்ஜவ்ன்’ குலத்துப் பெண் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (திருமணத்திற்குப்பின் தாம்பத்திய உறவிற்காக) உள்ளே அனுப்பியபோது அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நெருங்கினார்கள். அப்போது அவர், ‘‘உங்களிடத்திலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘மகத்துவமிக்க (இறை)வனிடம் நீ பாதுகாப்புக் கோரிவிட்டாய்! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றுவிடு!” என்று கூறிவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 68

(புகாரி: 5254)

بَابُ مَنْ طَلَّقَ، وَهَلْ يُوَاجِهُ الرَّجُلُ امْرَأَتَهُ بِالطَّلاَقِ

حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا الوَلِيدُ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ:

سَأَلْتُ الزُّهْرِيَّ، أَيُّ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَتْ مِنْهُ؟ قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ ابْنَةَ الجَوْنِ، لَمَّا أُدْخِلَتْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَنَا مِنْهَا، قَالَتْ: أَعُوذُ بِاللَّهِ مِنْكَ، فَقَالَ لَهَا: «لَقَدْ عُذْتِ بِعَظِيمٍ، الحَقِي بِأَهْلِكِ»

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: رَوَاهُ حَجَّاجُ بْنُ أَبِي مَنِيعٍ، عَنْ جَدِّهِ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ عُرْوَةَ، أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ قَالَتْ


Bukhari-Tamil-5254.
Bukhari-TamilMisc-5254.
Bukhari-Shamila-5254.
Bukhari-Alamiah-4852.
Bukhari-JawamiulKalim-4878.




2 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உர்வா பின் ஸுபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: ஸுனன் ஸயீத்-, புகாரி-5254 , இப்னு மாஜா-2050 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-3417 , முஸ்னத் அபீ யஃலா-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, தாரகுத்னீ-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,


மேலும் பார்க்க: புகாரி-5637 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.