தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-13160

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அன்சாரிகளில் ஒரு இளைஞர் அல்லாஹ்வின் தூதரே நான் ஜிஹாத் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். தயார் செய்வதற்கென்று என்னிடத்தில் எந்தப் பொருளும் இல்லை என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) அன்சாரிகுலத்தைச் சார்ந்த இந்த நபரிடம் செல். அவர் (போருக்கான ஏற்பாடுகளை) தயார் செய்து வைத்திருந்தார். பிறகு நோய்வாய்ப் பட்டுவிட்டார். ஆகையால் நீ (அவரிடம் சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு சலாம் கூ‎றினார்கள். இன்னும் நீங்கள் தயார் செய்துவைத்திருந்ததை என்னிடத்தில் ஒப்படைக்கும் படி கூறினார்கள் என்று சொல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்….

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 13160)

حَدَّثَنَا رَوْحٌ، وَعَفَّانُ الْمَعْنَى، قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،

أَنَّ فَتًى مِنَ الْأَنْصَارِ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُرِيدُ الْجِهَادَ، وَلَيْسَ لِي مَالٌ أَتَجَهَّزُ بِهِ، فَقَالَ: ” اذْهَبْ إِلَى فُلَانٍ الْأَنْصَارِيِّ، فَإِنَّهُ قَدْ كَانَ تَجَهَّزَ وَمَرِضَ، فَقُلْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْرِئُكَ السَّلَامَ، وَيَقُولُ لَكَ: ادْفَعْ إِلَيَّ مَا تَجَهَّزْتَ بِهِ “. فَقَالَ لَهُ ذَلِكَ: فَقَالَ: يَا فُلَانَةُ ادْفَعِي إِلَيْهِ مَا جَهَّزْتِنِي بِهِ، وَلَا تَحْبِسِي عَنْهُ شَيْئًا، فَإِنَّكِ وَاللَّهِ إِنْ حَبَسْتِ عَنْهُ شَيْئًا لَا يُبَارَكُ لَكِ فِيهِ

قَالَ عَفَّانُ: إِنَّ فَتًى مِنْ أَسْلَمَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-12684.
Musnad-Ahmad-Shamila-13160.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12909.




மேலும் பார்க்க: முஸ்லிம்-3847 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.