தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5271

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது ‘அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே!’ என்று அழைத்து, ‘பிற்போக்கானவன் விபசாரம் செய்துவிட்டான்’ என்று தம்மைப் பற்றிக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தை அவரைவிட்டுத் திருப்பினார்கள். உடனே அவர் நபி(ஸல்) அவர்கள் திரும்பிய பகுதிக்கு வந்து அவர்களின் முகத்திற்கு நேராக நின்று கொண்டு முன்போன்றே கூறினார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் முகத்தை (வேறு திசையில்) திருப்பினார்கள். அவர் மறுபடியும் நபி(ஸல்) அவர்கள் திரும்பிய பகுதிக்கு அவர்களின் முகத்தை நேராக நின்று கொண்டு முன்போன்றே கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வேறு பக்கம் திரும்பினார்கள். (இவ்வாறு) நான்காம் முறையளாக நபி(ஸல்) அவர்களின் முகத்திற்கு நேராக நின்று கொண்டு, தாம் விபசாரம் செய்துவிட்டதாக நான்கு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அவரை நபி(ஸல்) அவர்கள் (அருகில்) அழைத்து ‘உனக்கு என்ன பைத்தியமா? (சுயநினைவோடுதான் கூறுகிறாயா?)” என்று கேட்டார்கள். அவர், ‘எனக்குப் பைத்தியம்) இல்லை. நான் தெளிவுடன்தான் இருக்கிறேன்)’ என்று கூறினார்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘இவரை அழைத்துச் சென்று கல்லெறி தண்டனை வழங்கிடுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். அந்த மனிதர் திருமணம் ஆனவராக இருந்தார்.

Book :68

(புகாரி: 5271)

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَسَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ

أَتَى رَجُلٌ مِنْ أَسْلَمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي المَسْجِدِ، فَنَادَاهُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الآخَرَ قَدْ زَنَى – يَعْنِي نَفْسَهُ – فَأَعْرَضَ عَنْهُ، فَتَنَحَّى لِشِقِّ وَجْهِهِ الَّذِي أَعْرَضَ قِبَلَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الآخَرَ قَدْ زَنَى، فَأَعْرَضَ عَنْهُ، فَتَنَحَّى لِشِقِّ وَجْهِهِ الَّذِي أَعْرَضَ قِبَلَهُ، فَقَالَ لَهُ ذَلِكَ، فَأَعْرَضَ عَنْهُ، فَتَنَحَّى لَهُ الرَّابِعَةَ، فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ دَعَاهُ فَقَالَ: «هَلْ بِكَ جُنُونٌ؟» قَالَ: لاَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ» وَكَانَ قَدْ أُحْصِنَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.