தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5284

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நான் (அடிமைப் பெண்ணான) பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பரீராவின் எசமான்கள் ‘வலா’ எனும் வாரிசுரிமை தங்களுக்கே இருக்கவேண்டும் என நிபந்தனையிட்டு, ‘இல்லையேல் விற்கமுடியாது என) மறுத்தனர். எனவே, இதைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் (உன் விருப்பப்படியே) பரீராவை நீ வாங்கி விடுதலை செய்தவருக்கே உரியதாகும் என்று கூறினார்கள்.

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம், இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது ‘இ(ந்த இறைச்சியான)து, பரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்டதாகும்’ என்று சொல்லப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இது பரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு (இது)அன்பளிப்பாகும்’ என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் ‘பரீரா தம் கணவர் விஷயத்தில் விருப்ப உரிமை அளிக்கப்பட்டார்’ எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

Book : 68

(புகாரி: 5284)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ

أَنَّ عَائِشَةَ، أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ فَأَبَى مَوَالِيهَا إِلَّا أَنْ يَشْتَرِطُوا الوَلاَءَ، فَذَكَرَتْ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ» وَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَحْمٍ، فَقِيلَ: إِنَّ هَذَا مَا تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، فَقَالَ: «هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ» حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، وَزَادَ: فَخُيِّرَتْ مِنْ زَوْجِهَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.