தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5369

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அதைப் பராமரிக்கும்) அதைப் போன்ற கடமை வாரிசுகள் மீதும் உண்டு எனும் (2:233ஆவது) வசனத் தொடரும், குழந்தைக்குப் பாலூட்டும் பொறுப்பில் தாய்க்குப் பங்கு உண்டா? என்பதும். அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், அல்லாஹ் இரு மனிதர்களை ஓர் உதாரணமாகக் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீதும் சக்தி அற்றவன். தன் எசமானுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான். மற்றவனோ தானும் நேர் வழியில் இருந்து கொண்டு, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான். இவ்விருவரும் சமம் ஆவார்களா? (16:76)23

 (நபி(ஸல்) அவர்கள் துணைவியாரான) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்

(நபி(ஸல்) அவர்களிடம்) நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் (முதல் கணவரான) அபூ ஸலமாவின் பிள்ளைகளுக்குச் செலவழிப்பதால் எனக்கு நன்மை உண்டா? நான் அவர்களை இன்னின்னவாறு (தேவை உள்ளவர்களாக)விட்டுவிட விரும்பவில்லை. அவர்களும் என் பிள்ளைகளே!’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்! அவர்களுக்காக நீ செலவிட்ட(ால் அ)தற்கான நன்மை உனக்கு உண்டு’ என்று பதிலளித்தார்கள்.

Book : 69

(புகாரி: 5369)

بَابُ {وَعَلَى الوَارِثِ مِثْلُ ذَلِكَ} [البقرة: 233] وَهَلْ عَلَى المَرْأَةِ مِنْهُ شَيْءٌ

{وَضَرَبَ اللَّهُ مَثَلًا رَجُلَيْنِ أَحَدُهُمَا أَبْكَمُ} [النحل: 76]- إِلَى قَوْلِهِ – {صِرَاطٍ مُسْتَقِيمٍ} [البقرة: 142]

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ لِي مِنْ أَجْرٍ فِي بَنِي أَبِي سَلَمَةَ أَنْ أُنْفِقَ عَلَيْهِمْ ، وَلَسْتُ بِتَارِكَتِهِمْ هَكَذَا وَهَكَذَا، إِنَّمَا هُمْ بَنِيَّ؟ قَالَ: «نَعَمْ، لَكِ أَجْرُ مَا أَنْفَقْتِ عَلَيْهِمْ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.