தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5510

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 நஹ்ரும் (ஒட்டகத்தின் கழுத்து நரம்பை அறுப்பதும்), தப்ஹும் (மற்றப் பிராணிகளின் குரல் வளைகளை அறுப்பதும்).35 இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அதாஉ (ரஹ்) அவர்கள், குரல்வளையை அறுப்பதும் (தப்ஹ்), கழுத்து நரம்பை அறுப்பதும் (நஹ்ர்) அதனதன் இடத்தில் (-பிராணிகளில்-)தான் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்கள்; நான்,குரல்வளையை அறுக்கவேண்டிய பிராணியின் கழுத்து நரம்பை அறுத்தால் போதுமா? என்று கேட்டேன். ஆம். (போதும். கழுத்து நரம்பை அறுக்கவேண்டிய) பசுமாடு தொடர்பாக அல்லாஹ் குரல்வளையை அறுப்பது எனக் (குர்ஆனில்) குறிப்பிட்டுள்ளான். ஆகவே, கழுத்து நரம்பை அறுக்கவேண்டிய பிராணி யின் குரல்வளையை அறுத்தாலும் செல்லும். இருப்பினும், அதன் கழுத்து நரம்பை அறுப்பதே எனக்கு விருப்பமானதாகும். தப்ஹ்’ என்பது (குரல்வளையை ஒட்டி இரு பக்கங்களிலும் உள்ள) இரு பெரிய நரம்புகளைத் துண்டிப்பதாகும் என்று சொன்னார்கள். நான், அந்தப் பெரிய நரம்புகளையும் தாண்டி (பின்) கழுத்து எலும்பைத் துண்டிக்க லாமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நான் அப்படிக் கருதவில்லை. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் என்னிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் கழுத்து எலும்பைத் துண்டிப்பதைத் தடை செய்துள்ளார்கள். மேலும், அவர்கள் கழுத்தெலும்புக்கு முன்புள்ள பகுதி வரைத் துண்டித்து, அது இறக்கும் வரை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று கூறினார்கள்’ எனச் சொன்னார்கள் என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும் (இதையும் நினைவு கூருக:) மூசா தம் சமூகத்தாரிடம், நீங்கள் ஒரு பசு மாட்டை அறுக்க வேண்டும் (தப்ஹ்’ செய்ய வேண்டும்) என்று திண்ணமாக அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகின்றான்என்று சொன்ன போது… மனமில்லாமலேயே அதை அவர்கள் அறுத்தார்கள் (2:67-71). சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஃதகாத்’ (அறுத்தல்) என்பது குரல் வளையையும் கழுத்து நரம்பையும் அறுப்ப தாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் அனஸ் (ரலி) ஆகியோர் அறுக்கும் போது ஒருவர் தலையை (முற்றாகத்) துண்டித்துவிட்டாலும் பரவாயில்லை. (அந்தப் பிராணியை உண்ணலாம்) என்று கூறியுள்ளனர்.

 அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு குதிரையை (அதன் கழுத்து நரம்பை) அறுத்து (‘நஹ்ர்’ செய்து) அதை உண்டோம்.

Book : 72

(புகாரி: 5510)

بَابُ النَّحْرِ وَالذَّبْحِ

وَقَالَ ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ: «لاَ ذَبْحَ وَلاَ مَنْحَرَ إِلَّا فِي المَذْبَحِ وَالمَنْحَرِ» قُلْتُ: أَيَجْزِي مَا يُذْبَحُ أَنْ أَنْحَرَهُ؟ قَالَ: «نَعَمْ، ذَكَرَ اللَّهُ ذَبْحَ البَقَرَةِ، فَإِنْ ذَبَحْتَ شَيْئًا يُنْحَرُ جَازَ، وَالنَّحْرُ أَحَبُّ إِلَيَّ، وَالذَّبْحُ قَطْعُ الأَوْدَاجِ» قُلْتُ: فَيُخَلِّفُ الأَوْدَاجَ حَتَّى يَقْطَعَ النِّخَاعَ؟ قَالَ: «لاَ إِخَالُ» وَأَخْبَرَنِي نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، نَهَى عَنِ النَّخْعِ، يَقُولُ: «يَقْطَعُ مَا دُونَ العَظْمِ، ثُمَّ يَدَعُ حَتَّى تَمُوتَ» وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً} [البقرة: 67] وَقَالَ: {فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ} [البقرة: 71] وَقَالَ سَعِيدٌ: عَنْ ابْنِ عَبَّاسٍ: «الذَّكَاةُ فِي الحَلْقِ وَاللَّبَّةِ» وَقَالَ ابْنُ عُمَرَ: وَابْنُ عَبَّاسٍ، وَأَنَسٌ: «إِذَا قَطَعَ الرَّأْسَ فَلاَ بَأْسَ»

حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، قَالَ: أَخْبَرَتْنِي فَاطِمَةُ بِنْتُ المُنْذِرِ، امْرَأَتِي، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَتْ

«نَحَرْنَا عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا فَأَكَلْنَاهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.