பாடம் : 13 நோயாளி மீது (ஆறுதலுக்காகக்) கை வைப்பது.
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார்
நான் மக்காவில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். நான், ‘அல்லாஹ்வின் நபியே! நான் செல்வத்தைவிட்டுச் செல்கிறேன். (ஆனால்,) ஒரேயொரு மகளைத்தான் நான் (என் வாரிசாக)விட்டுச் செல்கிறேன். எனவே, என் செல்வத்தில் இரண்டிலொரு பங்கை (தானம் செய்யும்படி) மரணம் சாசனம் செய்துவிட்டு (வாரிசான என் மகளுக்கு) மூன்றிலொரு பங்கை மட்டும்விட்டுச் செல்லட்டுமா?’ என்று கேட்டேன்.
நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறினார்கள். நான், ‘பாதியை மரண சாசனம் செய்துவிட்டுப் பாதியை (என் மகளுக்கு)விட்டுச் செல்லட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கும் நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறினார்கள். நான், ‘அப்படியென்றால் மூன்றிலொரு பங்கு (தானம் செய்யும்படி) மரண சாசனம் செய்துவிட்டு இரண்டிலொரு பங்கை அவளுக்காகவிட்டுச் செல்லட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம்தான்’ என்று கூறினார்கள்.18
பிறகு தம் கையை என் நெற்றியின் மீது வைத்துப் பிறகு அதை என் வயிற்றின் மீதும் என் முகத்தின் மீதும் தடவினார்கள். பின்னர், ‘இறைவா! ஸஅதுக்குக் குணமளிப்பாயாக. அவரின் ஹிஜ்ரத்தை முழுமைப்படுத்துவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அவர்களின் (கரத்தின்) குளிர்ச்சியை என் ஈரலில் இப்போதும் கூட நான் உணர்வதைப் போன்று இருக்கிறது.
Book : 75
(புகாரி: 5659)بَابُ وَضْعِ اليَدِ عَلَى المَرِيضِ
حَدَّثَنَا المَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الجُعَيْدُ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدٍ، أَنَّ أَبَاهَا، قَالَ
تَشَكَّيْتُ بِمَكَّةَ شَكْوًا شَدِيدًا، فَجَاءَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، إِنِّي أَتْرُكُ مَالًا، وَإِنِّي لَمْ أَتْرُكْ إِلَّا ابْنَةً وَاحِدَةً، فَأُوصِي بِثُلُثَيْ مَالِي وَأَتْرُكُ الثُّلُثَ؟ فَقَالَ: «لاَ» قُلْتُ: فَأُوصِي بِالنِّصْفِ وَأَتْرُكُ النِّصْفَ؟ قَالَ: «لاَ» قُلْتُ: فَأُوصِي بِالثُّلُثِ وَأَتْرُكُ لَهَا الثُّلُثَيْنِ؟ قَالَ: «الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ» ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى جَبْهَتِهِ، ثُمَّ مَسَحَ يَدَهُ عَلَى وَجْهِي وَبَطْنِي، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ اشْفِ سَعْدًا، وَأَتْمِمْ لَهُ هِجْرَتَهُ» فَمَا زِلْتُ أَجِدُ بَرْدَهُ عَلَى كَبِدِي – فِيمَا يُخَالُ إِلَيَّ – حَتَّى السَّاعَةِ
சமீப விமர்சனங்கள்