தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-393

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 145

தொழுகை நேரங்கள்.

393. கஃபாவில் இரு தடவை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் எனக்கு முன்னின்று தொழுவித்தார்கள். செருப்பின் வார் அளவிற்கு சூரியன் சாய்ந்த நேரத்தில் என்னோடு லுஹர் தொழுவித்தார்கள். ஒரு பொருளின் அது போன்ற அளவுக்கு ஆகிவிடும் போது என்னுடன் அஸர் தொழுவித்தார்கள். நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் என்னுடன் மக்ரிபு தொழுதார்கள். செம்மேகம் மறைந்ததும் என்னுடன் இஷா தொழுதார்கள். உண்ணுவதும், குடிப்பதும் நோன்பாளிக்கு கடைசியாகி விடும் நேரத்தில் என்னுடன் பஜ்ர் தொழுதார்கள். மறுநாளானதும், ஒரு பொருளின் அளவு அது போன்று ஆகிவிட்ட நேரத்தில் என்னுடன் லுஹர் தொழுதார்கள். ஒரு பொருளின் அது போன்று இரு மடங்கான நேரத்தில் என்னுடன் அஸர் தொழுதார்கள். நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் என்னுடன் மக்ரிபு தொழுதார்கள். இரவில் மூன்றாம் பகுதி கடந்த போது என்னுடன் இஷா தொழுதார்கள். என்னுடன் சுப்ஹ் தொழுதார்கள். அப்போது வானம் வெளுக்க ஆரம்பித்து விட்டது. பிறகு என்னை நோக்கி திரும்பி, முஹம்மதே! இத்தொழுகை உமக்கு முன்னால் உள்ள இறைத் தூதர்களின் தொழுகை நேரமாகும். இவ்விரு நேரங்களுக்கிடையில் தான் தொழுகை நேரம் அடங்கியிருக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : (ரலி).

இப்னு அப்பாஸ் (ரலி)

عبد الله بن عباس

இறப்பு: ஹிஜ்ரி 68, தாயிஃப்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்

தந்தை பெயர்: அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப்

வம்சம்: குரைஷீ, ஹாஷிமீ

புனைப்பெயர்: அபூ அப்பாஸ், அல்ஹிப்ர், அல்பஹ்ர்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, தாயிஃப்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 3, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 68, தாயிஃப்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப் ரலி அவர்களின் மகனாவார். ஹிஜ்ரிக்கு முன் 3 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்த இவர், ஹிஜ்ரி 68 ஆம் ஆண்டு தாயிஃபில் மரணமடைந்தார். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு மார்க்க அறிவையும் குர்ஆன் விளக்கத்தையும் அருளுமாறு இருமுறை துஆ செய்தார்கள்.

இவர் தனது பரந்த அறிவின் காரணமாக 'அல்ஹிப்ர்' (அறிஞர்), 'அல்பஹ்ர்' (கடல்) என்று அழைக்கப்பட்டார். இவர் நபித்தோழர்களில் மிகப் பெரும் அறிஞர்களில் ஒருவராவார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப், உம்முல் ஃபழ்ல் லுபாபா பின்த் அல்ஹாரிஸ், மைமூனா பின்த் அல்ஹாரிஸ், அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான், அலீ பின் அபீதாலிப், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப், முஆத் பின் ஜபல், அபூதர் அல்ஃகிஃபாரீ, உபை பின் கஅப்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஜாஹித் பின் ஜப்ர், காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர், அதா பின் அபீரபாஹ், தாவூஸ் பின் கைஸான், வஹ்ப் பின் முனப்பிஹ், ஸயீத் பின் ஜுபைர், அலீ பின் அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அப்துல்லாஹ் பின் உமர், அபூத்துஃபைல் ஆமிர் பின் வாத்திலா, இக்ரிமா, அம்ர் பின் தீனார், நாஃபிஉ

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அபூ அப்பாஸ்


ஆதாரம்: muslimscholars.info (17) · Should verify


145- بَابٌ فِي الْمَوَاقِيتِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ فُلَانِ بْنِ أَبِي رَبِيعَةَ، عَنْ حَكِيمِ بْنِ حَكِيمٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَمَّنِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام عِنْدَ الْبَيْتِ مَرَّتَيْنِ، فَصَلَّى بِيَ الظُّهْرَ حِينَ زَالَتِ الشَّمْسُ وَكَانَتْ قَدْرَ الشِّرَاكِ، وَصَلَّى بِيَ الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّهُ مِثْلَهُ، وَصَلَّى بِيَ يَعْنِي الْمَغْرِبَ حِينَ أَفْطَرَ الصَّائِمُ، وَصَلَّى بِيَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ، وَصَلَّى بِيَ الْفَجْرَ حِينَ حَرُمَ الطَّعَامُ وَالشَّرَابُ عَلَى الصَّائِمِ، فَلَمَّا كَانَ الْغَدُ صَلَّى بِيَ الظُّهْرَ حِينَ كَانَ ظِلُّهُ مِثْلَهُ، وَصَلَّى بِي الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّهُ مِثْلَيْهِ، وَصَلَّى بِيَ الْمَغْرِبَ حِينَ أَفْطَرَ الصَّائِمُ، وَصَلَّى بِيَ الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ، وَصَلَّى بِيَ الْفَجْرَ فَأَسْفَرَ» ثُمَّ الْتَفَتَ إِلَيَّ فَقَالَ: «يَا مُحَمَّدُ، هَذَا وَقْتُ الْأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ، وَالْوَقْتُ مَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-393.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.



மேலும் பார்க்க: திர்மிதீ-149 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.