நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் தொழுகையைப் பற்றி குறிப்பிட்டார்கள். அப்போது யார் அதை பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் வெற்றியாகவும் இருக்கும். மேலும் யார் அதை பேணவில்லையோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் வெற்றியாகவும் ஆதாரமாகவும் இருக்காது.
மேலும் அவர் மறுமை நாளில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபைய்யு பின் கலஃப் ஆகியாருடன் இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 6576)حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا سَعِيدٌ، حَدَّثَنِي كَعْبُ بْنُ عَلْقَمَةَ، عَنْ عِيسَى بْنِ هِلَالٍ الصَّدَفِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ: ذَكَرَ الصَّلَاةَ يَوْمًا فَقَالَ: «مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا، وَبُرْهَانًا، وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ يَكُنْ لَهُ نُورٌ، وَلَا بُرْهَانٌ، وَلَا نَجَاةٌ،
وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ قَارُونَ، وَفِرْعَوْنَ، وَهَامَانَ، وَأُبَيِّ بْنِ خَلَفٍ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-6288.
Musnad-Ahmad-Shamila-6576.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6397.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-33089-ஈஸா பின் ஹிலால் அஸ்ஸதஃபீ என்பவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். மேலும் இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர். - மேலும் யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அவர்கள், இவரை எகிப்தைச் சேர்ந்த பலமான தாபிஈன்களின் பட்டியலில் கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார். அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவரைப் பற்றி குறையோ அல்லது நிறையோ கூறவில்லை. (தாபிஈன்களில் ஒருவரைப் பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் குறையோ, நிறையோ கூறாவிட்டால் அவரிடம் அவர் பலமானவர் என்று சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்)
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/290, அஸ்ஸிகாத்-5/213, தஹ்தீபுல் கமால்-23/53, தஹ்தீபுத் தஹ்தீப்-3/370, தக்ரீபுத் தஹ்தீப்-1/772, அல்ஜாமிஉ ஃபில்ஜர்ஹி வத்தஃதீல்-3460, 2/346)
- என்றாலும் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவரைப் பற்றி உஸ்ஸிக-பலமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அல்காஷிஃப்-4405, 3/583)
- ஏற்கத்தக்க சான்றிதல் இல்லாதபோது தான் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவ்வாறு குறிப்பிடுவார் என்றும், குறிப்பாக இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் ஆகியோர் மட்டும் பலமானவர் என்று கூறியவர்களை இவ்வாறு கூறுவார் என்றும் ஹதீஸ்கலை ஆய்வாளர்களில் சிலர் கூறியுள்ளனர். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களின் கருத்தின்படி அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் ஈஸா பின் ஹிலால் அஸ்ஸதஃபீ என்பவரை அறியப்படாதவர் என்று கருதுவதால் ஆரம்பத்தில் இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறினாலும் பிறகு இந்த செய்தியை பலவீனமானது என்று கூறினார்.
(நூல்: அத்தஃலீகுர் ரஃகீப்-1/191)
- என்றாலும் இப்னுல் கய்யிம், ஹைஸமீ, ஷுஐப் அல்அர்னாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அப்துல்அஸீஸ் தரீஃபீ ஆகியோர் இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்…
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-6576 , தாரிமீ-2763 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-3180 , 3181 , இப்னு ஹிப்பான்-1467 , அல்முஃஜமுல் கபீர்-163 , அல்முஃஜமுல் அவ்ஸத்-1767 ,
சமீப விமர்சனங்கள்