பாடம் : 10 சட்டைக் கை குறுகலான நீளங்கியை (ஜுப்பா) பயணத்தில் அணிவது.
முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தின் போது) தம் இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர்களை எதிர்கொண்டேன். பிறகு அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு நீளங்கி (ஜுப்பா) அணிந்திருந்தார்கள்.
அப்போது அவர்கள் வாய்கொப்பளித்து நாசிக்குத் தண்ணீர் செலுத்திவிட்டுத் தம் முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரண்டு கைகளையும் சட்டைக் கைகளிலிருந்து வெளியே எடுக்கப் போனார்கள். ஆனால், சட்டைக் கைகள் குறுகலாக இருந்தன. எனவே, தம் இருகைகளையும் அவர்கள் நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவிக் கொண்டார்கள். மேலும், தலையை (ஈரக் கையால் ‘மஸ்ஹ்’ செய்து) தடவினார்கள். (‘மோஸா’ எனும்) காலுறையையும் (ஈரக் கையால்) தடவினார்கள்.17
Book : 77
(புகாரி: 5798)بَابُ مَنْ لَبِسَ جُبَّةً ضَيِّقَةَ الكُمَّيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي أَبُو الضُّحَى، قَالَ: حَدَّثَنِي مَسْرُوقٌ، قَالَ: حَدَّثَنِي المُغِيرَةُ بْنُ شُعْبَةَ، قَالَ
«انْطَلَقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ، ثُمَّ أَقْبَلَ، فَتَلَقَّيْتُهُ بِمَاءٍ، فَتَوَضَّأَ، وَعَلَيْهِ جُبَّةٌ شَأْمِيَّةٌ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ، فَذَهَبَ يُخْرِجُ يَدَيْهِ مِنْ كُمَّيْهِ، فَكَانَا ضَيِّقَيْنِ، فَأَخْرَجَ يَدَيْهِ مِنْ تَحْتِ الجُبَّةِ فَغَسَلَهُمَا، وَمَسَحَ بِرَأْسِهِ وَعَلَى خُفَّيْهِ»
சமீப விமர்சனங்கள்