தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5862

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 44

தங்கப் பித்தான் பொருத்தப்பட்ட ஆடை.

 மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) அறிவித்தார்:

(என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘என் அன்பு மகனே! நபி( ஸல்) அவர்களிடம் மேலங்கிகள் சில வந்திருப்பதாகவும் அவற்றை அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக் கொண்டிருப்பதாகவும் எனக்குச் செய்தி எட்டியுள்ளது. எனவே, எம்மை அவர்களிடம் அழைத்துச் செல்’ என்றார்கள். அவ்வாறே நாங்கள் சென்று நபி (ஸல்) அவர்களை, அவர்களின் வீட்டில் கண்டோம். அப்போது என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், ‘என் அருமை மகனே! எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு’ என்றார்கள். அதை மரியாதைக் குறைவாகக் கருதிய நான், ‘உங்களுக்காக நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கூப்பிடுவதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என் அன்பு மகனே! (நபி-ஸல்) அவர்கள் சர்வாதிகாரி அல்லர்’ என்று சொல்ல, நான்       நபி (ஸல்) அவர்களைக் கூப்பிட்டேன். அப்போது அவர்கள் தங்கப் பித்தான் பொருத்தப்பட்ட அலங்காரப்பட்டு மேலங்கியொன்றை எடுத்துக் கொண்டு வந்து, ‘மக்ரமாவே! இதை உங்களுக்காக நான் எடுத்து வைத்தேன்’ என்று சொல்லி மக்ரமாவிடம் அதைக் கொடுத்தார்கள்.78

Book : 77

(புகாரி: 5862)

بَابُ المُزَرَّرِ بِالذَّهَبِ

وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ المِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، أَنَّ أَبَاهُ مَخْرَمَةَ قَالَ لَهُ

يَا بُنَيِّ، إِنَّهُ بَلَغَنِي أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَتْ عَلَيْهِ أَقْبِيَةٌ فَهُوَ يَقْسِمُهَا، فَاذْهَبْ بِنَا إِلَيْهِ، فَذَهَبْنَا فَوَجَدْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَنْزِلِهِ، فَقَالَ لِي: يَا بُنَيِّ ادْعُ لِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْظَمْتُ ذَلِكَ، فَقُلْتُ: أَدْعُو لَكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: يَا بُنَيِّ، إِنَّهُ لَيْسَ بِجَبَّارٍ، فَدَعَوْتُهُ، فَخَرَجَ وَعَلَيْهِ قَبَاءٌ مِنْ دِيبَاجٍ مُزَرَّرٌ بِالذَّهَبِ، فَقَالَ: «يَا مَخْرَمَةُ، هَذَا خَبَأْنَاهُ لَكَ» فَأَعْطَاهُ إِيَّاهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.