பராஉ (ரலி) அறிவித்தார்:
சிவப்பு நிற ஆடையில் நபி (ஸல்) அவர்களை விட அழகானவராக வேறெவரையும் நான் பார்க்கவில்லை.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
மாலிக் இப்னு இஸ்மாயீல் (ரஹ்) அவர்களிடமிருந்து என் தோழர்களில் ஒருவர், ‘நபி (ஸல்) அவர்களின் தலைமுடி (நீண்டு வளர்ந்திருக்கும் சமயத்தில்) அவர்களின் தோள்களைத் தொட்டுக்கொண்டிருந்தது’ என்று அறிவித்தார்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ இஸ்ஹாக் அம்ர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை பராஉ (ரலி) அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் அறிவிப்பதை கேட்டிருக்கிறேன். இதை அறிவிக்கும் போதெல்லாம் அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை. அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடமிருந்து ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸில், ‘நபி (ஸல்) அவர்களின் (தலை) முடி அவர்களின் காதின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது’ என்று இடம் பெற்றுள்ளது. 104
Book :77
(புகாரி: 5901)حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ البَرَاءَ، يَقُولُ
«مَا رَأَيْتُ أَحَدًا أَحْسَنَ فِي حُلَّةٍ حَمْرَاءَ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
قَالَ بَعْضُ أَصْحَابِي، عَنْ مَالِكٍ: «إِنَّ جُمَّتَهُ لَتَضْرِبُ قَرِيبًا مِنْ مَنْكِبَيْهِ»
قَالَ أَبُو إِسْحَاقَ: – «سَمِعْتُهُ يُحَدِّثُهُ غَيْرَ مَرَّةٍ، مَا حَدَّثَ بِهِ قَطُّ إِلَّا ضَحِكَ -»
قَالَ شُعْبَةُ: «شَعَرُهُ يَبْلُغُ شَحْمَةَ أُذُنَيْهِ»
சமீப விமர்சனங்கள்