பாடம் : 9 பெருந்துடக்குடையவர் கையில் எவ்வித அசிங்கமும் இல்லாத போது கையைக் கழுவுவதற்கு முன்னர் கையைத் தண்ணீர் பாத்திரத்தில் நுழைக்கலாமா?
இப்னு உமர் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோர் தங்கள் கையைக் கழுவுவதற்கு முன்னர் தண்ணீர் பாத்திரத்தில் கையை நுழைத்துள்ளனர். பின்னர் உளூ செய்தனர். கடமையான குளியலை நிறைவேற்றும் போது அதிலிருந்து தெறிக்கும் தண்ணீரால் எவ்விதப் பாதிப்புமில்லை என இப்னு உமர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கருதுகிறார்கள்.
‘நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தில் மாறி மாறிச் செல்லும்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 5
بَابٌ: هَلْ يُدْخِلُ الجُنُبُ يَدَهُ فِي الإِنَاءِ قَبْلَ أَنْ يَغْسِلَهَا، إِذَا لَمْ يَكُنْ عَلَى يَدِهِ قَذَرٌ غَيْرُ الجَنَابَةِ
وَأَدْخَلَ ابْنُ عُمَرَ، وَالبَرَاءُ بْنُ عَازِبٍ يَدَهُ فِي الطَّهُورِ وَلَمْ يَغْسِلْهَا، ثُمَّ تَوَضَّأَ
وَلَمْ يَرَ ابْنُ عُمَرَ، وَابْنُ عَبَّاسٍ بَأْسًا بِمَا يَنْتَضِحُ مِنْ غُسْلِ الجَنَابَةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، أَخْبَرَنَا أَفْلَحُ بْنُ حُمَيْدٍ، عَنِ القَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
«كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، تَخْتَلِفُ أَيْدِينَا فِيهِ»
சமீப விமர்சனங்கள்