281 . மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிலிருந்து நீங்குவதற்கு குளித்துக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு நான் திரையிட்டேன். அவர்கள் (முதலில்) தம்மிரு கைகளையும் (மணிக்கட்டுகள் வரைக்) கழுவினார்கள். பிறகு தமது வலக் கையினால் (தண்ணீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றி, தமது மர்ம உறுப்பையும் அதில் பட்டிருந்த (இந்திரியத்)தையும் கழுவினார்கள். பிறகு (அந்தக்) கையை ‘சுவரின் மீதோ’ அல்லது ‘தரையின் மீதோ’ தேய்த்தார்கள்.
பிறகு இரு கால்களைத் தவிர (உளூவின் மற்ற உறுப்புகளுக்கு) தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு தம் உடம்பிற்குத் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சிறிது நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள்.
(புகாரீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியில் இடம்பெறும் “நான் திரையிட்டேன்” என்றக் கருத்தை அஃமஷ் அவர்களிடமிருந்து ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் அறிவித்திருப்பதைப் போன்றே அபூஅவானா, இப்னு ஃபுளைல் ஆகியோரும் அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.)
(எனவே இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது)
அத்தியாயம்: 5
(புகாரி: 281)حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ قَالَتْ
«سَتَرْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَغْتَسِلُ مِنَ الجَنَابَةِ، فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ صَبَّ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ، ثُمَّ مَسَحَ بِيَدِهِ عَلَى الحَائِطِ أَوِ الأَرْضِ، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ غَيْرَ رِجْلَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ المَاءَ، ثُمَّ تَنَحَّى، فَغَسَلَ قَدَمَيْهِ»
تَابَعَهُ أَبُو عَوَانَةَ، وَابْنُ فُضَيْلٍ فِي السَّتْرِ
சமீப விமர்சனங்கள்