தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-294

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 6

மாதவிடாய்

பாடம் : 1

மாதவிடாய் எப்படி ஆரம்பமானது?

நபி (ஸல்) அவர்கள், “இ(ந்த மாத விடாயான)து, ஆதமுடைய பெண் மக்கள்மீது அல்லாஹ் எழுதிவிட்ட ஒன்றாகும்” என்று சொன்னார்கள். சிலர், “பனூ இஸ்ராயீல் சமுதாயப் பெண்களிருந்தே முதன் முதலில் மாதவிடாய் ஆரம்பமானது” என்று கூறுகின்றனர். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகின்றேன்: நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட பொன்மொழி பொதுவானது ஆகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டுச் சென்றோம். ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் நாங்கள் எண்ணியிருக்கவில்லை. (மக்காவுக்கு அருகிலுள்ள) ‘சரிஃப்’ எனும் இடத்தில் நாங்கள் இருந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதுகொண்டிருக்கவே, “உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (மாதவிடாய்), அல்லாஹ் ஆதமின் பெண் மக்களுக்கு எழுதிவிட்ட விதியாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தையும் நீயும் நிறைவேற்று. ஆனால், இறையில்லம் கஅபாவை மட்டும் சுற்றி (தவாஃப்) வராதே” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஹஜ்ஜின்போது) தம் மனைவியர் சார்பாக மாட்டை அறுத்(து குர்பானி கொடுத்)தார்கள்.

 

(புகாரி: 294)

6 – كِتَابُ الحَيْض
وَقَوْلُ اللَّهِ تَعَالَى: {وَيَسْأَلُونَكَ عَنِ المَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي المَحِيضِ} [البقرة: 222]- إِلَى قَوْلِهِ – {وَيُحِبُّ المُتَطَهِّرِينَ} [البقرة: 222]
بَابُ كَيْفَ كَانَ بَدْءُ الحَيْضِ وَقَوْلُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا شَيْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ»
وَقَالَ بَعْضُهُمْ: «كَانَ أَوَّلُ مَا أُرْسِلَ الحَيْضُ عَلَى بَنِي إِسْرَائِيلَ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «وَحَدِيثُ النَّبِيِّ صلّى الله عليه وسلم أَكْثَرُ»

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ القَاسِمِ، قَالَ: سَمِعْتُ القَاسِمَ بْنَ مُحَمَّدٍ، يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ:

خَرَجْنَا لاَ نَرَى إِلَّا الحَجَّ، فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي، قَالَ: «مَا لَكِ أَنُفِسْتِ؟». قُلْتُ: نَعَمْ، قَالَ: «إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ» قَالَتْ: وَضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ


Bukhari-Tamil-294.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-294.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.