தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1495

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ்(ரலி) அறிவித்தார்.

பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்’ என்றார்கள்.
Book :24

(புகாரி: 1495)

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِلَحْمٍ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، فَقَالَ

«هُوَ عَلَيْهَا صَدَقَةٌ، وَهُوَ لَنَا هَدِيَّةٌ»

وَقَالَ أَبُو دَاوُدَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعَ أَنَسًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ





3 comments on Bukhari-1495

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    ஹதீஸ் அறிவிப்பாளரின் பெயர் தெரியவில்லை

    ஆனால் ஹதீஸில் சொல்லப்பட்ட செய்திகள் ஞாபகத்தில் உள்ளது

    ஒருமுறை ஒரு சஹாபி தான் பசியோடு இருக்கும் சமயத்தில் தன்னுடைய அடிமையிடம் சாப்பிடுவதற்கு ஏதாவது இருப்பின் அதைக் கொண்டு வருமாறு கூறியிருந்தார்

    அந்த அடிமையோ தன்னிடம் இருந்த பால் போன்ற ஒரு பொருளை அந்த சகாபீடம் கொடுத்தார்

    அந்த சஹாபி பசியின் காரணமாக அதை உட்கொண்டு விட்டார்

    பிறகு கொடுக்கப்பட்ட பொருளை பற்றி விசாரித்துள்ளார்

    அந்த அடிமைப்பெண் கூறியதாவது

    தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொருள் அந்த அடிமைப் பெண்ணுடைய முந்தைய எஜமானர் அவர் குறி சொல்லக்கூடியவராக இருந்தார் பிறகு அவர் என்னை விடுதலை செய்து விட்டார் அந்த எஜமானரை ஒரு இடத்தில் கண்டபோது அவர்

    எனக்கு அன்பளிப்பாக இந்த பொருளை எனக்கு கொடுத்திருந்தார்

    தாங்கள் பசிப்பதாக சொன்னதனால் நான் என்னிடம் இருந்த இந்த அன்பளிப்பை உங்களிடம் கொடுத்தேன் என்று கூறினார்

    இதை கேட்ட அந்த சஹாபி உனக்கு நாசம் உண்டாகட்டுமாக என்று கூறி

    தான் உட்கொண்ட பொருளை வாமிட் செய்ததாக அந்த ஹதீஸ் நான் கேள்வி பட்டுள்ளேன்

    இந்த ஹதீஸ உங்களுக்கு கிடைக்குமானால் இங்கு பதிவுமாறு வேண்டிக்கொள்கிறேன் ஜஸாக்கல்லாஹ்

  2. Assalamu Alaikkum Wr Wb….

    இந்த ஹதீஸ உங்களுக்கு கிடைக்குமானால் இங்கு பதிவுமாறு வேண்டிக்கொள்கிறேன்

    ஜஸாக்கல்லாஹ்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.