தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-111

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அலீ (ரலி) அவர்கள் தொழுது முடித்து விட்டு எங்களிடம் வந்தார்கள். தண்ணீர் கொண்டு ‎வரச் சொன்னார்கள். அவர்கள் தொழுது முடித்துவிட்ட நிலையில் தண்ணீர் கொண்டு ‎வருமாறு சொல்வது நமக்கு (உலூவின் முறைகளைக்) கற்றுத் தருவதற்காகவே என ‎நாங்கள் பேசிக்கொண்டோம். தண்ணீருள்ள பாத்திரமும் (உலூச் செய்து நீரைப் ‎பிடிப்பதற்காக) ஒரு தட்டும் கொண்டு வரப்பட்டது. அப்பாத்திரத்திலிருந்து தனது வலது ‎கையில் தண்ணீர் ஊற்றி தமது இரு கைகளையும் மும்முறை கழுவினார்கள். பிறகு ‎மூன்று தடவை வாய் கொப்பளித்து மூன்று முறை நாசிக்கு தண்ணீர் செலுத்தி மூக்கை ‎சுத்தம் செய்தார்கள். அப்போது, தான் அள்ளுகிற ஒருகை நீரிலேயே வாய் கொப்பளித்து ‎மூக்கையும் சுத்தம் செய்தார்கள். (இரண்டிற்கும் தனித்தனியாக மூன்றுமுறை நீர் ‎அள்ளவில்லை) பிறகு தமது முகத்தை மூன்று தடவையும், வலது கையை மூன்று ‎தடவையும், இடது கையை மூன்று தடவையும் கழுவினார்கள்.‎

பிறகு பாத்திரத்தில் கையை விட்டு தலைக்கு ஒரே ஒரு முறை மஸஹ் செய்தார்கள். பிறகு ‎வலது காலை மூன்றுமுறையும் இடது காலை மூன்று முறையும் கழுவி பின்னர், ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உலூச் செய்யும் முறையை அறிய ‎ஆவலுள்ளவருக்கு இது போதும் என்று கூறினார்கள். இதை அப்துகைர் அவர்கள் ‎அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)‎

(அபூதாவூத்: 111)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ خَالِدِ بْنِ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ خَيْرٍ، قَالَ

أَتَانَا عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَقَدْ صَلَّى فَدَعَا بِطَهُورٍ، فَقُلْنَا مَا يَصْنَعُ بِالطَّهُورِ وَقَدْ صَلَّى مَا يُرِيدُ، إِلَّا لِيُعَلِّمَنَا، فَأُتِيَ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ وَطَسْتٍ «فَأَفْرَغَ مِنَ الْإِنَاءِ عَلَى يَمِينِهِ، فَغَسَلَ يَدَيْهِ ثَلَاثًا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا، فَمَضْمَضَ وَنَثَرَ مِنَ الْكَفِّ الَّذِي يَأْخُذُ فِيهِ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى ثَلَاثًا، وَغَسَلَ يَدَهُ الشِّمَالَ ثَلَاثًا، ثُمَّ جَعَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَمَسَحَ بِرَأْسِهِ مَرَّةً وَاحِدَةً، ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى ثَلَاثًا، وَرِجْلَهُ الشِّمَالَ ثَلَاثًا»، ثُمَّ قَالَ: «مَنْ سَرَّهُ أَنْ يَعْلَمَ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ هَذَا»،


AbuDawood-Tamil-111.
AbuDawood-Shamila-111.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.