நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறவேண்டும். அவ்விரண்டிற்கு பின்பு (கிராஅத்) குர்ஆன் ஓதவேண்டும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
(அபூதாவூத்: 1151)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ الطَّائِفِيَّ، يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«التَّكْبِيرُ فِي الْفِطْرِ سَبْعٌ فِي الْأُولَى، وَخَمْسٌ فِي الْآخِرَةِ، وَالْقِرَاءَةُ بَعْدَهُمَا كِلْتَيْهِمَا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-971.
Abu-Dawood-Shamila-1151.
Abu-Dawood-Alamiah-971.
Abu-Dawood-JawamiulKalim-973.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
இந்த செய்தி நபியின் செயலாக வந்திருப்பதே மஹ்ஃபூலாகும். சொல்லாக வந்திருப்பது ஷாத் ஆகும். காரணம் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் யஃலா பின் கஅப் அத்தாயிஃபீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலர் இந்தச் செய்தியை நபியின் செயலாக அறிவித்துள்ளனர். முஃதமிர் அவர்கள் மட்டுமே நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.
முஃதமிர் நினைவாற்றலில் குறையுடையவர் என்று யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.கூறியுள்ளார். இப்னு கிராஷ் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 283
அவர்கள், இவர் நூலிலிருந்து அறிவித்தால் சரியானது. மனனத்திலிருந்து அறிவித்தால் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்…
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/117)
- இந்த சட்டம் சரியானது என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் செயலே போதுமானதாகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-1278.
சமீப விமர்சனங்கள்