அபூஉமாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் உலூவின் முறையை விவரிக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு கண்களின் குழிகளையும் தேய்த்துக் கழுவுவார்கள் என்று கூறிவிட்டு, இரு காதுகளும் தலையின் ஒரு பகுதி தான் என்றும் கூறினார்கள் என அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(இது காதுகளும் தலையின் ஒரு பகுதியே) இந்த கருத்தை அபூஉமாமா (ரலி) அவர்கள்தான் கூறுகிôர்கள் என சுலைமான் பின்ஹர்ப் அறிவிக்கிறார்.
இரு காதுகளும் தலையின் ஒரு பகுதியே என்ற சொல் நபி (ஸல்) அவர்கள் கூறியதா? அல்லது அபூஉமாமா (ரலி) கூறியதா? என்ற விபரத்தை நான் அறியேன் என்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாத் குறிப்பிடுவதாக குதைபா தெரிவிக்கின்றார்.
(குறிப்பு : திர்மிதீ, இப்னுமாஜாவிலும் இது இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடர் அவ்வளவு சரியானதல்ல என இமாம் திர்மிதீ குறிப்பிடுகிறார்கள்.)
(அபூதாவூத்: 134)حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، وَقُتَيْبَةُ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ سِنَانِ بْنِ رَبِيعَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، وَذَكَرَ وُضُوءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ الْمَأْقَيْنِ»، قَالَ: وَقَالَ: «الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ»، قَالَ سُلَيْمَانُ بْنُ حَرْبٍ: يَقُولُهَا: أَبُو أُمَامَةَ، قَالَ قُتَيْبَةُ: قَالَ حَمَّادٌ: لَا أَدْرِي هُوَ مِنْ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ مِنْ أَبِي أُمَامَةَ – يَعْنِي قِصَّةَ الْأُذُنَيْنِ – قَالَ قُتَيْبَةُ: عَنْ سِنَانٍ أَبِي رَبِيعَةَ
قَالَ أَبُو دَاوُدَ: وَهُوَ ابْنُ رَبِيعَةَ كُنْيَتُهُ أَبُو رَبِيعَةَ
AbuDawood-Tamil-134.
AbuDawood-Shamila-134.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்