அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி உலூச் செய்தார்கள் என்பதை உங்களுக்கு நான் செயல் முறையில் காட்ட விரும்புகின்றீர்களா? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டு விட்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். தமது வலக்கரத்தினால் ஒரு சிரங்கையளவு நீரள்ளி வாய் கொப்பளித்து நாசிக்கும் நீர் செலுத்தி மூக்கு சுத்தம் செய்தார்கள். பிறகு இன்னொரு கையளவு நீர் அள்ளி, இரண்டு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து தனது முகத்தைக் கழுவினார்கள். பிறகு இன்னொரு கையளவு நீர் அள்ளி தனது இடது கையைக் கழுவினார்கள். பிறகு ஒரு கைப்பிடி அளவு தண்ணீர் எடுத்து செருப்பணிந்திருந்த தனது வலது காலில் தெளித்து ஒரு கையை கால்பாதத்திற்கு மேலும் மற்றொரு கையை செருப்பிற்கு கீழுமாக ஆக்கி இரு கைகளினால் மஸஹ் செய்தார்கள். (தடவினார்கள்) பிறகு இது போன்று இடது காலிலும் செய்தார்கள் என அதாஃ பின் யஸார் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)
(அபூதாவூத்: 137)حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا زَيْدٌ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، قَالَ
قَالَ لَنَا ابْنُ عَبَّاسٍ: أَتُحِبُّونَ أَنْ أُرِيَكُمْ كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ «فَدَعَا بِإِنَاءٍ فِيهِ مَاءٌ فَاغْتَرَفَ غَرْفَةً بِيَدِهِ الْيُمْنَى فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ أَخَذَ أُخْرَى فَجَمَعَ بِهَا يَدَيْهِ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ، ثُمَّ أَخَذَ أُخْرَى فَغَسَلَ بِهَا يَدَهُ الْيُمْنَى، ثُمَّ أَخَذَ أُخْرَى فَغَسَلَ بِهَا يَدَهُ الْيُسْرَى، ثُمَّ قَبَضَ قَبْضَةً مِنَ الْمَاءِ، ثُمَّ نَفَضَ يَدَهُ، ثُمَّ مَسَحَ بِهَا رَأْسَهُ وَأُذُنَيْهِ، ثُمَّ قَبَضَ قَبْضَةً أُخْرَى مِنَ الْمَاءِ فَرَشَّ عَلَى رِجْلِهِ الْيُمْنَى، وَفِيهَا النَّعْلُ، ثُمَّ مَسَحَهَا بِيَدَيْهِ يَدٍ فَوْقَ الْقَدَمِ وَيَدٍ تَحْتَ النَّعْلِ، ثُمَّ صَنَعَ بِالْيُسْرَى مِثْلَ ذَلِكَ»
AbuDawood-Tamil-137.
AbuDawood-Shamila-137.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்