தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1379

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் சிறுவனாக இருந்த சமயம், பனூ ஸலமா கூட்டத்தாரின் சபையில் இருக்கும் போது லைலதுல் கத்ர் இரவு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது என்று பேசிக் கொண்டோம். இது ரமளான் மாதம் 21 ஆம் நாள் காலையில் நடந்தது.

(அன்றைய தினம்) நான் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களுடன் மஃரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். பிறகு நான் அவர்களின் வீட்டுவாசலில் நின்றுக் கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். (அவர்கள் என்னைக் கண்டு) வீட்டுக்குள் வா! என்று என்னை அழைத்தார்கள். நான் வீட்டுக்குள் நுழைந்தேன்.

அவர்களுக்கு இரவு உணவு கொண்டுவந்து வைக்கப்பட்டது. (நானும் சிறிது சாப்பிட்டேன்). அது குறைவாக இருந்ததால் நான் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் இதைக் கவனித்தார்கள்.

அவர்கள் சாப்பிட்டப்பின், “எனது செறுப்பை எடுத்துவா!” என்று கூறி எழுந்தார்கள். நானும் அவர்களுடன் எழுந்தேன். அப்போது நபி (ஸல்)  அவர்கள், “உமக்கு ஏதேனும் தேவை இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், ஆம் (அல்லாஹ்வின் தூதரே!). லைலதுல் கத்ர் பற்றி கேட்டு வர என்னை பனூ ஸலமா கூட்டத்தினர் அனுப்பினார்கள் என்று கூறினேன்.

அதற்கு, இது எத்தனையாவது இரவு? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 22 ஆம் இரவு என்று நான் குறிப்பிட்டேன். “இது தான் அந்த இரவு என்று நபி (ஸல்) கூறினார்கள். (பின்னர் திரும்பி வந்து அல்லது முதல் கருத்தை மறுத்து) அல்லது அடுத்த இரவு எனக் கூறி 23 ஆம் இரவைக் குறிப்பிட்டார்கள்.

(அபூதாவூத்: 1379)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ السُّلَمِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ عَبَّادِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ الزُّهْرِيِّ، عَنْ ضَمْرَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ، عَنْ أَبِيهِ، قَالَ

كُنْتُ فِي مَجْلِسِ بَنِي سَلَمَةَ وَأَنَا أَصْغَرُهُمْ، فَقَالُوا:: مَنْ يَسْأَلُ لَنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ، وَذَلِكَ صَبِيحَةَ إِحْدَى وَعِشْرِينَ مِنْ رَمَضَانَ؟ فَخَرَجْتُ فَوَافَيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْمَغْرِبِ، ثُمَّ قُمْتُ بِبَابِ بَيْتِهِ، فَمَرَّ بِي فَقَالَ: «ادْخُلْ»، فَدَخَلْتُ فَأُتِيَ بِعَشَائِهِ، فَرَآنِي أَكُفُّ عَنْهُ مِنْ قِلَّتِهِ، فَلَمَّا فَرَغَ، قَالَ: «نَاوِلْنِي نَعْلِي» فَقَامَ وَقُمْتُ مَعَهُ، فَقَالَ: «كَأَنَّ لَكَ حَاجَةً»، قُلْتُ: أَجَلْ، أَرْسَلَنِي إِلَيْكَ رَهْطٌ مِنْ بَنِي سَلَمَةَ، يَسْأَلُونَكَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ، فَقَالَ: «كَمِ اللَّيْلَةُ؟» فَقُلْتُ: اثْنَتَانِ وَعِشْرُونَ، قَالَ: «هِيَ اللَّيْلَةُ»، ثُمَّ رَجَعَ، فَقَالَ: «أَوِ الْقَابِلَةُ»، يُرِيدُ لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1171.
Abu-Dawood-Shamila-1379.
Abu-Dawood-Alamiah-1171.
Abu-Dawood-JawamiulKalim-1173.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.