தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-139

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 54

வாய் கொப்பளிப்பதையும் மூக்கை சுத்தம் செய்வதையும் தனித்தனியாகச் செய்தல்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது உலூச் செய்து கொண்டிருந்த அவர்களின் முகம் மற்றும் தாடியிலிருந்து தண்ணீர் மார்பில் வழிந்தோடக் கண்டேன். அவர்கள் வாய் கொப்பளிப்பதற்கும் நாசிக்கும் தண்ணீர் செலுத்தி மூக்கை சுத்தம் செய்யவும் தனித்தனியாகத் தண்ணீர் எடுக்கக் கண்டேன் என தல்ஹா (ரலி) அவர்கள் தமது தந்தை கூறியதாக பாட்டனாரி டமிருந்து அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு : இது பலவீனமான ஹதீஸ். அறிவிப்பாளர் தல்ஹா (ரலி) அவர்களின் தந்தை முஸர்ரிஃப் அவர்கள் ஹதீஸ் கலையில் யாரென்றே அறியப்படாதவர். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் லைஸ் பின் அபீஸலீம் பலவீனமானவர் ஹதீஸ் எண் 132 இன் குறிப்பு பார்க்க.)

(அபூதாவூத்: 139)

54- بَابٌ فِي الْفَرْقِ بَيْنَ الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ لَيْثًا، يَذْكُرُ عَنْ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ

«دَخَلْتُ – يَعْنِي – عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَتَوَضَّأُ، وَالْمَاءُ يَسِيلُ مِنْ وَجْهِهِ وَلِحْيَتِهِ عَلَى صَدْرِهِ، فَرَأَيْتُهُ يَفْصِلُ بَيْنَ الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ»


AbuDawood-Tamil-139.
AbuDawood-Shamila-139.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.