தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-142

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பனூ முன்தஃபிக் கூட்டத்தினரின் சார்பில் தூதராக நபி (ஸல்) அவர்களிடம் நான் வந்திருந்தேன். (அல்லது அத்தூதுக் குழுவில் ஒருவனாக இருந்தேன்.) நாங்கள் வந்தபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை அவர்களது இல்லத்தில் காணவில்லை. ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களைக் கண்டோம். அவர்கள் எங்களுக்கு கஸீரா என்ற உணவைத் தயாரிக்க உத்தரவிட்டார்கள். அது தயாரிக்கப்பட்டு விட்டது. பின்னர், எங்களுக்கு பேரீத்தம் பழங்கள் அடங்கிய தட்டு கொண்டு வரப்பட்டது.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, நீங்கள் ஏதாவது சாப்பிட்டீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் ஆம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்று பதில் அளித்தோம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும் போது அவர்களின் ஆடு மேய்ப்பாளர் நபி (ஸல்) அவர்களுக்குச் சொந்தமான ஆடுகளை கொட்டடிக்கு ஓட்டிச் சென்றார். அவரிடம் அப்போது தான் பிறந்த ஆட்டுக் குட்டியும் சப்தமிட்டுக் கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவரிடம் என்னப்பா! நமது ஆடு என்ன குட்டி ஈன்று உள்ளது? என்று கேட்டார்கள். அதற்கு அவர் விட் காரண்தால்) அதற்கு பதிலாக நமது ஆடுகளில் ஒன்றை அறுப்பீராக! என்று சொன்னார்கள். பிறகு (விருந்தினர்களை நோக்கி நபி(ஸல்)அவர்கள்) உங்களுக்காக நாங்கள் (சிரமேற்கொண்டு)அதை அறுக்கின் றோம் என்று நீர் எண்ணிவிடாதீர்! எங்களி டம் நூறு ஆடுகள் இருக்கின்றன. அதைவிட ஒன்று அதிகமாவதை நாங்கள் விரும்பு வதில்லை. எங்களின் ஆடு, ஒரு பெண்குட் டியை ஈன்று விட்டால் அதற்குப் பகரமாக நாங்கள் ஒரு ஆட்டை அறுப்போம் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களே! எனது மனைவிக்கு நாக்கு கொஞ்சம் நீளம். அதாவது தீயவார்த்தை களைப் பேசும் வாயாடி என்று நான் சொன்னதும் நீ அவளை விவாகரத்து செய்து விடு! என்றார்கள்.

அதற்கு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அவள் மூலம் எனக்கு ஒரு குழந்தை இருப்பதோடு அவளிடம் நான் பாசமுடனும் இருக்கிறேன் என்று கூறியதும் நீ அவளுக்கு அறிவுரை கூறு! அவளிடம் நல்லெண்ணம் இருப்பின் அவள் நல்லவிதமாக நடந்து கொள்வாள். நீ உனது அடிமைப் பெண்ணை அடிப்பது போல உனது மனைவியை அடிக்காதே! என்று கூறினார்கள். அடுத்து, அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களே! எனக்கு உலூச் செய்யும் முறையை தெரிவித்துக் கொடுங்கள் என்றேன். அதற்கு அவர்கள் உலூவை பூரணமாகச் செய். உலூச்செய் யும் உனது கைவிரல்களுக்கிடையே கோதிக் கழுவு நீ நோன்பாளியாக இருந்தாலே தவிர நாசிக்கு தண்ணீர் செலுத்தி மூக்கை சுத்தம் செய்! என்று கூறினார்கள் என லகீத் பின் ஸபிரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு : திர்மிதீ, அஹ்மத், நஸயீ, ஹாகிம், இப்னுமாஜா, பைஹகீ, இப்னுகுஸைமா, இப்னு ஹிப்பான் ஆகியவற்றிலும் இடம் பெற்றுள்ளது.)

(அபூதாவூத்: 142)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، فِي آخَرِينَ، قَالُوا: حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ كَثِيرٍ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبْرَةَ، عَنْ أَبِيهِ لَقِيطِ بْنِ صَبْرَةَ، قَالَ

كُنْتُ وَافِدَ بَنِي الْمُنْتَفِقِ – أَوْ فِي وَفْدِ بَنِي الْمُنْتَفِقِ – إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَلَمَّا قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ نُصَادِفْهُ فِي مَنْزِلِهِ، وَصَادَفْنَا عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ، قَالَ: فَأَمَرَتْ لَنَا بِخَزِيرَةٍ فَصُنِعَتْ لَنَا، قَالَ: وَأُتِينَا بِقِنَاعٍ – وَلَمْ يَقُلْ قُتَيْبَةُ: الْقِنَاعَ، وَالْقِنَاعُ: الطَّبَقُ فِيهِ تَمْرٌ – ثُمَّ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَلْ أَصَبْتُمْ شَيْئًا؟ – أَوْ أُمِرَ لَكُمْ بِشَيْءٍ؟» قَالَ: قُلْنَا: نَعَمْ، يَا رَسُولَ اللَّهِ، قَالَ: فَبَيْنَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُلُوسٌ، إِذْ دَفَعَ الرَّاعِي غَنَمَهُ إِلَى الْمُرَاحِ، وَمَعَهُ سَخْلَةٌ تَيْعَرُ، فَقَالَ: «مَا وَلَّدْتَ يَا فُلَانُ؟»، قَالَ: بَهْمَةً، قَالَ: «فَاذْبَحْ لَنَا مَكَانَهَا شَاةً»، ثُمَّ قَالَ: ” لَا تَحْسِبَنَّ وَلَمْ يَقُلْ: لَا تَحْسَبَنَّ أَنَّا مِنْ أَجْلِكَ ذَبَحْنَاهَا، لَنَا غَنَمٌ مِائَةٌ لَا نُرِيدُ أَنْ تَزِيدَ، فَإِذَا وَلَّدَ الرَّاعِي بَهْمَةً، ذَبَحْنَا مَكَانَهَا شَاةً ” قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي امْرَأَةً وَإِنَّ فِي لِسَانِهَا شَيْئًا – يَعْنِي الْبَذَاءَ – قَالَ: «فَطَلِّقْهَا إِذًا»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ لَهَا صُحْبَةً، وَلِي مِنْهَا وَلَدٌ، قَالَ: ” فَمُرْهَا يَقُولُ: عِظْهَا فَإِنْ يَكُ فِيهَا خَيْرٌ فَسَتَفْعَلْ، وَلَا تَضْرِبْ ظَعِينَتَكَ كَضَرْبِكَ  أُمَيَّتَكَ ” فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي، عَنِ الْوُضُوءِ، قَالَ: «أَسْبِغِ الْوُضُوءَ، وَخَلِّلْ بَيْنَ الْأَصَابِعِ، وَبَالِغْ فِي الِاسْتِنْشَاقِ إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا»


AbuDawood-Tamil-142.
AbuDawood-Shamila-142.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.