1443 . இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, சுபுஹ் ஆகிய அனைத்து தொழுகைகளின் இறுதியில், (அதாவது) கடைசி ரக்அத்தி்ல் “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறும் போது பனூ ஸுலைம் கோத்திரத்தாரில் ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய குலத்தாருக்கு எதிராக பிரார்த்தித்து குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் உள்ளவர்கள் ஆமீன் சொன்னார்கள்.
(அபூதாவூத்: 1443)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، عَنْ هِلَالِ بْنِ خَبَّابٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ
قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا مُتَتَابِعًا فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ، إِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ مِنَ الرَّكْعَةِ الْآخِرَةِ، يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ، عَلَى رِعْلٍ، وَذَكْوَانَ، وَعُصَيَّةَ، وَيُؤَمِّنُ مَنْ خَلْفَهُ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1231.
Abu-Dawood-Shamila-1443.
Abu-Dawood-Alamiah-1231.
Abu-Dawood-JawamiulKalim-1233.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி ஹிலால் பின் கப்பாப் பற்றி, பல அறிஞர்கள் உறுதிப்படுத்தியிருந்தாலும் இவர் கடைசிக் காலத்தில் மூளை குழம்பிவிட்டார் என்றும் அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.பாகம் : 11 பக்கம் 69)
- மேலும் இவரின் அறிவிப்பை மற்ற பலமான அறிவிப்பாளர்களுடன் ஒப்பிட்டு பார்த்தே ஏற்க வேண்டும் என இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4/288) - என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இவர் இடம்பெறும் செய்திகள் பலமானவர்களுக்கு மாற்றமாக இல்லாத இடங்களில் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார். (அஸ்ஸஹீஹா-2119)
மேலும் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-2746 .
அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரரே இந்த ஹதீஸின் தரம் தேவை.இன்ஷா அல்லாஹ் தெரிவிக்கவும்.அல்லாஹ் உங்கள் பணிகளை பொருந்திக்கொள்வானாக.
அபூஸுஹைர் நுமைரீ (ரலி) அவர்கள் கூறியதாவது ஒருவர் மிகவும் உருக்கமாக துஆ செய்துகொண்டிருந்தார். அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “இவர் ‘ஆமீன்’ கூறி துஆவை முடிப்பாரானால் ஏற்கப்படும்” என்று கூறினார்கள். (அபூதாவூத்)
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதில் வரும் ஸுபைஹ் பின் முஹ்ரிஸ் என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை.
حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ ، عَنْ حُيَيِّ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ : أَيْ رَبِّ، مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ، فَشَفِّعْنِي فِيهِ، وَيَقُولُ الْقُرْآنُ : مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ، فَشَفِّعْنِي فِيهِ “، قَالَ : ” فَيُشَفَّعَانِ ”
احمد 6626
إسناده ضعيف، ابن لهيعة -واسمه عبد الله-، وحيي بن عبد الله، كلاهما ضعيف.
மேலும் ஹாக்கிமில் தப்ரானியில் இந்த செய்தி வருகிறது அதை பதிவு செய்யவும்