தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-145

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம் : 56

தாடியை கோதி விடுதல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்யும் போது ஒரு கையளவு தண்ணீர் எடுத்து தமது முகவாய்க் கட்டைக்குக் கீழே அதைச் செலுத்தி தமது தாடியைக் கோதி விடுவார்கள். மேலும் எனது இறைவன் எனக்கு இவ்வாறு தான் கட்டளையிட்டுள்ளான் எனவும் கூறினார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு : திர்மிதீ, இப்னுமாஜா, இப்னு குஸைமா, ஹாகிம், தாரகுத்னீ, இப்னு ஹிப்பான் போன்ற நூல்களிலும் தாடியைக் கோதிக் கழுவுவது பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. எனினும் இவற்றில் எந்த ஹதீஸுமே ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல. இமாம் புகாரி அவர்கள் திர்மிதீயில் இடம் பெறும் 31-வது ஹதீஸை ஏற்றுக் கொள்ளத்தக்க (ஹஸன்) ஹதீஸ் எனக் குறிப்பிடுகிறார்கள். மேற்கண்ட ஹதீஸில் இடம் பெறும் அல்வலீத் பின் ஸவ்ரான் யாரென்றே அறியப்படாதவர்.)

(அபூதாவூத்: 145)

56- بَابُ تَخْلِيلِ اللِّحْيَةِ

حَدَّثَنَا أَبُو تَوْبَةَ يَعْنِي الرَّبِيعَ بْنَ نَافِعٍ، حَدَّثَنَا أَبُو الْمَلِيحِ، عَنِ الْوَلِيدِ بْنِ زَوْرَانَ، عَنْ أَنَسٍ يَعْنِي ابْنَ مَالِكٍ

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا تَوَضَّأَ، أَخَذَ كَفًّا مِنْ مَاءٍ فَأَدْخَلَهُ تَحْتَ حَنَكِهِ فَخَلَّلَ بِهِ لِحْيَتَهُ»، وَقَالَ: «هَكَذَا أَمَرَنِي رَبِّي عَزَّ وَجَلَّ»

قَالَ أَبُو دَاوُدَ: وَالْوَلِيدُ بْنُ زَوْرَانَ، رَوَى عَنْهُ حَجَّاجُ بْنُ حَجَّاحٍ، وَأَبُو الْمَلِيحِ الرَّقِّيُّ


AbuDawood-Tamil-145.
AbuDawood-Shamila-145.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.