பாடம் : 60
காலுறைகளை மஸஹ் செய்யும் கால வரம்பு.
காலுறைகளை மஸஹ் செய்யும் காலம் பயணிக்கு மூன்று நாட்களாகும். உள்ளூர் வாசிக்கு ஒரு பகலும் ஒரு இரவும் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : குஸைமா பின் ஸாபித் (ரலி)
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
தனது அறிவிப்பாளர் வரிசை மூலம் (இதை) இப்றாகீம் அத்தைமீ என்பாரிடமிருந்து மன்சூர் பின் அல்முஃதமர் அறிவிக்கும் போது இந்த காலவரையை, நீங்கள் நீட்டி கேட்டிருந்தால் நபி (ஸல்) அவர்கள் நீட்டி தந்திருப்பார்கள் என்று அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 157)60- بَابُ التَّوْقِيتِ فِي الْمَسْحِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، وَحَمَّادٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ، عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«الْمَسْحُ عَلَى الْخُفَّيْنِ لِلْمُسَافِرِ ثَلَاثَةُ أَيَّامٍ، وَلِلْمُقِيمِ يَوْمٌ وَلَيْلَةٌ»
قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ، عَنْ إِبْرَاهِيمَ التَيمِيِ بِإِسْنَادِهِ، قَالَ فِيهِ: وَلَوِ اسْتَزَدْنَاهُ لَزَادَنَا
AbuDawood-Tamil-157.
AbuDawood-Shamila-157.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்