பாடம் : 61
ஜவ்ரபின் மீது மஸஹ் செய்தல்.
(ஜவ்ரப் என்பது காலுறைக்கு மேல் அணியக்கூடிய கரண்டைக்கு மேல் உயரமான பெரிய காலணியாகும்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள். அவர்கள் (சில சமயங்களில்) ஜவ்ரபின் மீதும், (சில சமயங்களில்) செருப்புகள் மீதும் மஸ்ஹு செய்தார்கள்.
அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள்
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
அப்துர் ரஹ்மான் பின் மஹ்திய்யா அவர்கள் இந்த ஹதீஸை அறிவிப்பதில்லை. காரணம் முகீரா (ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படும் தெளிவான ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் காலுறை மீது மஸ்ஹு செய்தார்கள் என்பது தான்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
நபி (ஸல்) அவர்கள் ஜவ்ரபின் மீது மஸ்ஹு செய்தார்கள் என்று மீண்டும் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூமூஸா அல் அஸ்அரீ அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது. ஆனால் தொடர்பு அறுந்ததாகவும் பலமற்றதாகவும் உள்ளது.
இமாம் அபூதாவூது குறிப்பிடுகின்றார்கள்.
அலீ பின் அபூதாலிப், இப்னு, மஸ்வூத், பராபின் ஆஸிப் அனஸ் பின் மாலிக், அபூஉமாமா, சஹ்ல் பின் சஃது, அம்ர்பின் ஹுரைஸ் ஆகியோர் ஜவ்ரபின் மீது மஸ்ஹு செய்துள்ளனர். இதை உமர்பின் அல்கத்தாப், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்படுகின்றது.
(அபூதாவூத்: 159)61- بَابُ الْمَسْحِ عَلَى الْجَوْرَبَيْنِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ وَكِيعٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي قَيْسٍ الْأَوْدِيِّ هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَرْوَانَ، عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ، وَالنَّعْلَيْنِ»
قَالَ أَبُو دَاوُدَ: كَانَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ: لَا يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ لِأَنَّ الْمَعْرُوفَ عَنِ الْمُغِيرَةِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ، قَالَ أَبُو دَاوُدَ: وَرُوِيَ هَذَا أَيْضًا عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ مَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ وَلَيْسَ بِالْمُتَّصِلِ وَلَا بِالْقَوِيِّ، قَالَ أَبُو دَاوُدَ: وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ، وَابْنُ مَسْعُودٍ، وَالْبَرَاءُ بْنُ عَازِبٍ، وَأَنَسُ بْنُ مَالِكٍ، وَأَبُو أُمَامَةَ، وَسَهْلُ بْنُ سَعْدٍ، وَعَمْرُو بْنُ حُرَيْثٍ وَرُوِيَ ذَلِكَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، وَابْنِ عَبَّاسٍ
AbuDawood-Tamil-159.
AbuDawood-Shamila-159.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்