மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருக்குமானால் பாதங்களின் அடிப்பாகமே மேற்பாகத்தை விட மஸஹ் செய்வதற்கு உரியதாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தனது காலுறைகளின் மேற்பகுதியில் மஸஹ் செய்துள்ளார்கள் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை பாதங்களின் மேற்பாகத்தில் மஸஹ் செய்யக் காணுகின்ற வரை பாதங்களின் அடிப்பாகந்தான் மேற்பாகத்தைவிட மஸஹ் செய்வதற்கு உரியது என்று கருதியிருந்தேன் என்று அஃமஷ் அவர்களிடமிருந்து அதே இஸ்னாத் மூலம் அறிவிக்கின்ற வகீஃ என்பார் பாதங்கள் என்றால் காலுறைகள் என்றே (இந்த இடத்தில்) இதன் பொருள் என்று விளக்குகிறார்.
வகிஃ அறிவிப்பது போன்றே அஃமஷ் என்பாரிடமிருந்து ஈஸா பின் யூனூஸ் அறிவிக்கின்றார்.
நான் அலீ (ரலி) அவர்களை உளூச் செய்யக் கண்டேன். அப்போது அவர்கள், தனது பாதங்களின் மேல்பகுதியை கழுவியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இதை (இவ்வாறு) நான் செய்யக் கண்டிருக்கவில்லையெனில்” என்று கூறினார்கள் என தன் தந்தை வாயிலாக அறிவிக்கும் அப்துகைர் மூலம் அபு அஸ்ஸவ்ஃதா என்பார் அறிவித்து இந்த ஹதீஸை தொடர்கிறார்.
(அபூதாவூத்: 164)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الْأَعْمَشِ، بِهَذَا الْحَدِيثِ، قَالَ
لَوْ كَانَ الدِّينُ بِالرَّأْيِ، لَكَانَ بَاطِنُ الْقَدَمَيْنِ أَحَقَّ بِالْمَسْحِ مِنْ ظَاهِرِهِمَا، وَقَدْ «مَسَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ظَهْرِ خُفَّيْهِ»
وَرَوَاهُ وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ بِإِسْنَادِهِ قَالَ: كُنْتُ أَرَى أَنَّ بَاطِنَ الْقَدَمَيْنِ أَحَقُّ بِالْمَسْحِ مِنْ ظَاهِرِهِمَا حَتَّى «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى ظَاهِرِهِمَا»،
قَالَ وَكِيعٌ: يَعْنِي الْخُفَّيْنِ وَرَوَاهُ عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، كَمَا رَوَاهُ وَكِيعٌ، وَرَوَاهُ أَبُو السَّوْدَاءِ، عَنِ ابْنِ عَبْدِ خَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ عَلِيًّا «تَوَضَّأَ فَغَسَلَ ظَاهِرَ قَدَمَيْهِ»، وَقَالَ: «لَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ» وَسَاقَ الْحَدِيثَ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-164.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-140.
சமீப விமர்சனங்கள்