தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-188

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஓர் இரவு நான் நபி (ஸல்) அவர் களிடம் விருந்தாளியாக தங்கினேன். அவர் கள் சிறிதளவு இறைச்சியை வறுவல் செய்யச் சொன்னார்கள். அவர்கள் கத்தியை எடுத்து அதை எனக்காக வெட்டத் துவங் கினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர் கள் வந்து அவர்களுக்கு தொழுகையை அறிவித்தார்கள். உடனே அவர்கள் கத்தியைப் போட்டு விட்டு இவருக்கு என்ன அவசரம்? அவரது கைகளில் மண் படியட்டும் என்று கூறி தொழலானார்கள். 

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள்

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அன்பாரி அவர்கள் எனக்கு மீசை அதிகமாக வளர்ந்திருந்தது. அதை எனக்கு ஒரு பற்குச்சியை (அளவாக) வைத்து (அதற்கு மேற்பட்டதை) கத்தரித்து விட்டார்கள் என்றோ அல்லது பற்குச்சியை (அளவாக) வைத்து உனக்கு நான் அதை கத்தரிப்பேன் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதை கூடுதலாக அறிவிக்கிறார்.

(அபூதாவூத்: 188)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْأَنْبَارِيُّ الْمَعْنَى، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، عَنْ أَبِي صَخْرَةَ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ

ضِفْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَأَمَرَ بِجَنْبٍ فَشُوِيَ، وَأَخَذَ الشَّفْرَةَ فَجَعَلَ يَحُزُّ لِي بِهَا مِنْهُ، قَالَ: فَجَاءَ بِلَالٌ فَآذَنَهُ بِالصَّلَاةِ، قَالَ: فَأَلْقَى الشَّفْرَةَ، وَقَالَ: «مَا لَهُ تَرِبَتْ يَدَاهُ» وَقَامَ يُصَلِّ، زَادَ الْأَنْبَارِيُّ: «وَكَانَ شَارِبِي وَفَى فَقَصَّهُ لِي عَلَى سِوَاكٍ» أَوْ قَالَ: «أَقُصُّهُ لَكَ عَلَى سِوَاكٍ؟»


AbuDawood-Tamil-188.
AbuDawood-Shamila-188.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.