தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-193

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்ஹர்ஸ் பின் ஜஸ்உ (ரலி) அவர்கள் எகிப்து நாட்டில் எங்களிடம் வருகை அளித்தனர். எகிப்திய பள்ளிவாசலில் அவர்கள் ஹதீஸ் அறிவிக்கும் போது நான் செவியுற்றேன். அவர் கூறியதாவது, ஒருவரது வீட்டில் அல் லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் நாங் கள் ஆறு, ஏழு பேர்கள் இருந்தோம் என எண்ணுகிறேன். அப்போது பிலால் (ரலி) வந்து அவர்களை தொழுகைக்கு அழைத் தார்கள். உடனே நாங்கள் புறப்பட்டு சட்டியை நெருப்பில்(அடுப்பில்) வைத் திருந்த ஒருவருக்கு அருகில் சென்றோம். அவரிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள் உனது சமையல் ஆகி விட்டதா? என்று வினவினார்கள். அவர் ஆம். எங்களின் தந்தையும் தாயும் தங்க ளுக்கு அர்ப்பணம் ஆகட்டும் என்று பதில ளித்தார். அதி லிருந்து அவர்கள் ஒரு துண்டை எடுத்து அதை தொழுகைக்கு அவர்கள் தக்பீர் கட்டும் வரை மென்று கொண்டிருந் தார்கள். நான் அவர்களையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். 

அறிவிப்பவர் : உபைத் பின் சுமாமா அல்முராதீ.

(அபூதாவூத்: 193)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي كَرِيمَةَ قَالَ ابْنُ السَّرْحِ: ابْنُ أَبِي كَرِيمَةَ مِنْ خِيَارِ الْمُسْلِمِينَ قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ بْنُ ثُمَامَةَ الْمُرَادِيُّ، قَالَ

قَدِمَ عَلَيْنَا مِصْرَ عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ بْنِ جَزْءٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَمِعْتُهُ يُحَدِّثُ فِي مَسْجِدِ مِصْرَ، قَالَ: لَقَدْ رَأَيْتُنِي سَابِعَ سَبْعَةٍ أَوْ سَادِسَ سِتَّةٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَارِ رَجُلٍ، فَمَرَّ بِلَالٌ فَنَادَاهُ بِالصَّلَاةِ، فَخَرَجْنَا فَمَرَرْنَا بِرَجُلٍ وَبُرْمَتُهُ عَلَى النَّارِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطَابَتْ بُرْمَتُكَ»، قَالَ: نَعَمْ، بِأَبِي أَنْتَ وَأُمِّي فَتَنَاوَلَ مِنْهَا بَضْعَةً، فَلَمْ يَزَلْ يَعْلُكُهَا حَتَّى أَحْرَمَ بِالصَّلَاةِ، وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ


AbuDawood-Tamil-193.
AbuDawood-Shamila-193.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.