பாடம் : 78
பால் பருகியதும் உளூச் செய்யாமலிருக்க அனுமதி.
அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் பால் பருகினார்கள். ஆனால், வாய்க் கொப்பளிக்காமலும், உலூச்செய்யாமலும் தொழுதார்கள் .
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜைத் அல்ஹப்பாப் என்பார் தனக்கு அறிவித்த அறிவிப்பாளர் முதீ பின் ராஷித் என்பாரைப் பற்றி, எனக்கு இந்த அறிவிப்பாளரை அறிமுகப்படுத்தியவர் ஷுஃபா ஆவார் என்று கூறுகிறார்.
(அபூதாவூத்: 197)78- بَابُ الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ زَيْدِ بْنِ الْحُبَابِ، عَنْ مُطِيعِ بْنِ رَاشِدٍ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ
«إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا، فَلَمْ يُمَضْمِضْ وَلَمْ يَتَوَضَّأْ وَصَلَّى»، قَالَ زَيْدٌ: دَلَّنِي شُعْبَةُ عَلَى هَذَا الشَّيْخِ
AbuDawood-Tamil-197.
AbuDawood-Shamila-197.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்