தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-226

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 90

குளிப்புக் கடமையானவர் குளிப்பதை தாமதிக்க அனுமதி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை குளிப்புக் கடமையான பின் முன்னிரவில் குளிக்கக் கண்டீர்களா? அல்லது பின்னிரவில் குளிக்கக் கண்டீர்களா? என்று நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவியபோது, சிலசமயம் அவர்கள் முன்னிரவிலும் குளிப்பார்கள், சில சமயம் பின்னிரவிலும் குளிப்பார்கள் என்று அன்னையார் பதிலளித்தார்கள். அல்லாஹ் மிகப் பெரியவன், இவ்விஷயத்தில் சலுகை வழங்கிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் என்று நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை சப்தமிட்டு ஓதக் கண்டீர்களா? என்று வினவியபோது சிலசமயம் குர்ஆனை அவர்கள் சப்தமிட்டு ஓதுவார்கள் சிலசமயம் குர்ஆனை குரல் தாழ்த்தி ஓதுவார்கள் என்று அன்னையார் பதிலளித்தார்கள். அல்லாஹ் மிகப் பெரியவன் இவ்விஷயத்தில் சலுகை வழங்கிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் என்று நான் கூறினேன்.

அறிவிப்பவர் : குலைப் பின் அல்ஹர்ஸ்.

(அபூதாவூத்: 226)

90- بَابٌ فِي الْجُنُبِ يُؤَخِّرُ الْغُسْلَ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَا: حَدَّثَنَا بُرْدُ بْنُ سِنَانٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ، قَالَ

قُلْتُ لِعَائِشَةَ: أَرَأَيْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ فِي أَوَّلِ اللَّيْلِ أَوْ فِي آخِرِهِ؟ قَالَتْ: «رُبَّمَا اغْتَسَلَ فِي أَوَّلِ اللَّيْلِ، وَرُبَّمَا اغْتَسَلَ فِي آخِرِهِ»، قُلْتُ: اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً قُلْتُ: أَرَأَيْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ أَوَّلَ اللَّيْلِ أَمْ فِي آخِرِهِ؟ قَالَتْ: «رُبَّمَا أَوْتَرَ فِي أَوَّلِ اللَّيْلِ وَرُبَّمَا أَوْتَرَ فِي آخِرِهِ»، قُلْتُ: اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً. قُلْتُ: أَرَأَيْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْهَرُ بِالْقُرْآنِ أَمْ يَخْفُتُ بِهِ؟ قَالَتْ: «رُبَّمَا جَهَرَ بِهِ وَرُبَّمَا خَفَتَ»، قُلْتُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً


AbuDawood-Tamil-226.
AbuDawood-Shamila-226.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.